மீண்டும் போருக்கு தயாராக வேண்டாம் : கொலம்பியா மாணவர்கள் பிரம்மாண்ட பேரணி

ஃபார்க் போராளிகள் மற்றும் கொலம்பியா அரசாங்கம் மீண்டும் போருக்கு தயாராகக் கூடாது என்பதை வலியுறுத்தி சமாதான உடன்படிக்கையின் ஆதரவாளர்கள் நாடு முழுக்க பேரணிகளை நடத்தி உள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 14 நகரங்களில் நடைபெற்ற பேரணியில் 26 பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் பங்கேற்ற பேரணியை சமூக வலைத்தளங்கள் மூலம் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

கடந்த ஞாயிறன்று மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இந்த சமாதான உடன்படிக்கையானது வாக்காளர்களால் தோற்கடிப்பட்டது.

14 நகரங்களில் நடைபெற்ற பேரணியில் 26 பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் பங்கேற்ற பேரணியை சமூக வலைத்தளங்கள் மூலம் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

முன்னர், இந்த சமாதான உடன்படிக்கை வேண்டாம் என்று பிரச்சாரம் மேற்கொண்டவரான முன்னாள் அதிபர் ஆல்வரோ ஊரிபே, இந்த உடன்படிக்கையில் சாத்தியமான திருத்தங்களை செய்வது குறித்து தற்போதைய அதிபர் யுவான் மானுவெல் சாண்டோஸை சந்தித்தார்.

இந்த ஒப்பந்தமானது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்றும், மொத்த மக்கள் தொகையில் வெறும் பாதி பேரை திருப்திப்படுத்த கூடியதாக இருக்க கூடாது என்றும் ஊரிபே தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

கொலம்பியாவில் அமைதி என்பது மிக நெருக்கத்தில் இருக்கிறது என்றும், கூடிய விரைவில் அதை அடைவோம் என்றும் அதிபர் யுவான் மானுவெல் சாண்டோஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்