தொலைக்காட்சி விவாதத்தில் ஹிலரி, டிரம்ப் பரஸ்பர குற்றச்சாட்டு

அமெரிக்காவின் அடுத்த அதிபராக போட்டியிடும் வேட்பாளர்களான டொனால்ட் டிரம்பும், ஹிலரி கிளிண்டனும் இரண்டாவது தொலைக்காட்சி விவாதத்தில் கசப்பான பரஸ்பர குற்றச்சாட்டுக்களை பரிமாறியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஒருவரையொருவர் மதிக்கின்ற அம்சம்: டிரம்பின் குழந்தைகளை போற்றுவதாக ஹிலரியும், ஹிலரி விட்டு கொடுக்காமல் இருப்பதை மதிப்பதாக டிரம்பும் தெரிவித்துள்ளனர்

பாலியல் ரீதியாகப் பெண்களைத் தொடுவது குறித்து டிரம்பின் கருத்துக்கள், அவர் அதிபராக தகுதியற்றவர் என்பதை காட்டுகின்றன என ஹிலரி கூறியிருக்கிறார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சாராக இருந்தபோது, தனிப்பட்ட மின்னஞ்சல் சேவையை பயன்படுத்தியதால் ஹிலரி சிறையில் அடைக்கப்பட வேண்டியவர் என்று டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஹிலரி, டிரம்ப் பரஸ்பர குற்றச்சாட்டு

செயின்ட் லூயிஸில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது, அவர்கள் இருவரும் சுகாதாரம், முஸ்லிம்கள் பற்றிய மனப்பான்மை, குடியேற்றம் மற்றும் சிரியா போர் போன்றவை பற்றிய வேறுபட்ட கருத்துக்களால் மோதிக்கொண்டனர்.

ஹிலரி கிளிண்டனை திரும்ப திரும்ப பொய்யர் என்று டிரம்ப் அழைக்க, மாற்று எதார்த்தத்தில் டிரம்ப் வாழ்ந்து வருவதாக ஹிலரி குற்றஞ்சாட்டினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சுகாதாரம், முஸ்லிம்கள் பற்றிய மனப்பான்மை, குடியேற்றம் மற்றும் சிரியா போர் போன்றவற்றில் வேறுபட்ட கருத்துக்களால் இருவரும் மோதல்

ஆனால், ஒருவரையொருவர் மதிக்கின்ற அம்சம் பற்றிய கடைசி கேள்வியில், டிரம்பின் குழந்தைகளை போற்றுவதாக ஹிலரி கூறினார்.

ஹிலரி விட்டு கொடுக்காமல் இருப்பதை மதிப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்