வடகொரியாவின் ராக்கெட் சோதனை முயற்சி தோல்வியில் முடிந்ததாக கூறும் தென் கொரியா

படத்தின் காப்புரிமை Getty Images

வட கொரியா நடத்திய சமீபத்திய ராக்கெட் சோதனை தோல்வியில் முடிந்தது என அமெரிக்க கடற்படை மற்றும் தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளன.

ராக்கெட் பறக்க தொடங்கிய உடனேயே வெடித்துச் சிதறியது என தென் கொரியர்கள் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமையன்று அந்த சோதனை முயற்சி குசாங் நகருக்கு அருகில் கண்டறியப்பட்டது என அமெரிக்க கடற்படை தளபதி கேரி ராஸ் தெரிவித்துள்ளார்.

அந்த ராக்கெட், 3000 கிமீ தூரத்திற்கும் அதிகமாக சென்று தாக்கும் வல்லமைக் கொண்ட முசுடன் என்னும் பெலிஸ்டிக் ஏவுகணையாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

ஆனால் வட கொரியா இது குறித்து எந்த தகவலையும் இதுவரை தெரிவிக்கவில்லை.