தென் கொரிய அதிபருக்கு எதிராக புதிய போராட்டம், பலத்த பாதுகாப்பில் சோல்

தென் கொரிய அதிபர் பார்க் குன் ஹைக்கு எதிராக நடத்தப்பவுள்ள ஒரு போராட்டத்தை முன்னிட்டு அந்நாட்டின் தலைநகரான சோலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption காவலில் இருக்கும் பார்க் குன் ஹை-இன் நெருங்கிய தோழி சோய் சூன் சில்

அரசின் கொள்கை முடிவுகளில் அதிபரின் நெருங்கிய தோழி, தேவையற்ற செல்வாக்கை செலுத்த அனுமதித்ததாக அதிபர் பார்க் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் நடைபெறுகின்ற மிகவும் சமீபத்திய போராட்டம் இதுவாகும்.

அதிபர் வளாகத்தை சுற்றி மக்கள் ஏற்கெனவே கூட தொடங்கிவிட்டதாவும், தண்ணீர் பீரங்கிகளையும், கலவர தடுப்பு காவல் துறையினரையும் தலைநகரின் தெருக்களில் காண முடிவதாவும் சோலில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்