சட்ட விரோத யானை தந்த சந்தையில் 90 சதவீதம் சமீபத்தில் வேட்டையாடப்பட்ட தந்தங்கள்

கைப்பற்றப்பட்ட சட்ட விரோத யானை தந்த ஏற்றுமதியில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில், அரசின் கிடங்குகளில் இருக்கும் யானை தந்தங்களின் பழைய இருப்பைவிட, சமீபத்தில் வேட்டையாடப்பட்ட யானைகளின் தந்தங்கள் தான் ஏறக்குறைய முற்றிலும் இருந்ததாக தெரியவந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

2002 முதல் 2014 ஆம் ஆண்டுக்குள் கைப்பற்றப்பட்ட 90 விழுக்காடு யானை தந்தங்கள், அந்த தந்தங்கள் கைப்பற்றப்படுவதற்கு முன்னதாக, மூன்று ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட யானைகளிடம் இருந்து எடுக்கப்பட்டவை என்று அமெரிக்க தேசிய அறிவியல் கழக இதழில் வெளியான அறிக்கை குறிப்பிடுகிறது.

பல தசாப்த காலமாக மேற்கொண்டு வருகின்ற உயர் மட்ட பாதுகாப்பு பிரசாரங்களும், சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் மில்லியன் கணக்கான டாலர் உதவிகளும் ஆப்ரிக்காவில் யானைகள் வேட்டையாடப்படுவதை முடிவுக்கு கொண்டு வர தவறியுள்ளதை இந்த கண்டுபிடிப்பு காட்டுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

யானை வேட்டை அதிகரித்த காரணத்தால், 2006 முதல் 2015 ஆம் ஆண்டுக்கு இடையில் ஆப்ரிக்க யானைகளின் எண்ணிக்கை 20 சதவீத அளவில் குறைந்தது என்று இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியம் செப்டம்பர் மாதம் தெரிவித்தது.

தொடர்புடைய தலைப்புகள்