மகனை தாக்கியதாக பிராட் பிட் மீதான குற்றச்சாட்டு குறித்த விசாரணை முடித்து வைப்பு

கடந்த செப்டம்பர் மாதத்தில், ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் தனது மகன் மீது கடுமையாக நடந்து கொண்டாரா என்பது குறித்த விசாரணை அவர் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படாமல் முடிவடைந்தகாக அமெரிக்க ஊடக தகவல்கள் தெரிவித்துள்ளன.

படத்தின் காப்புரிமை AP
Image caption பிராட் பிட், ஆஞ்ஜெலீனா ஜோலி

ஒரு தனி ஜெட் விமானத்தில், ஹாலிவுட் நடிகரான பிராட் பிட் தனது 15 வயது மகனை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகர சமூக நலத்துறை பணியாளர்கள் ஆய்வு செய்து வந்தனர்.

இந்த சம்பவம் நடந்ததற்கு அடுத்த நாளே பிராட் பிட்டின் மனைவி நடிகை ஆஞ்ஜெலீனா ஜோலி விவகாரத்து கோரி விண்ணப்பம் செய்த்து குறிப்பிடத்தக்கது.

அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் தான் ஆகியிருந்தாலும், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

தொடர்புடைய தலைப்புகள்