போலிச் செய்திகளைத் தடுக்க ஃபேஸ்புக் நடவடிக்கை #BeyondFakeNews

  • 20 நவம்பர் 2016

ஃபேஸ்புக் இணைய தளத்தில் போலி செய்திகள் பிரசுரிக்கப்படுவதைத் தடுக்கும் வண்ணம் புதிய நடவடிக்கைகளை ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் அறிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption போலி செய்திகளைத் தடுக்க பேஸ்புக் நடவடிக்கை

``தவறான தகவல்களை` கண்டுபிடித்து, அவற்றைப் பட்டியலிடும் புதிய மேம்பட்ட வழிமுறைகளை ஃபேஸ்புக் உருவாக்கிவருவதாக மார்க் ஸுக்கர்பர்க் கூறினார்.

தகவல்களின் உண்மைத்தன்மையை பரிசோதிக்கும் நிறுவனங்கள் ஏற்கனவே இருக்கும் நிலையில், அவைகளுடன் இணைந்து ஃபேஸ்புக் பணியாற்றலாம் என்று அவர் கூறியிருக்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னர், போலி செய்திகள் வெளியிடப்படுவதாக ஃபேஸ்புக் ஏற்கனவே விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

இந்த போலிச் செய்திகள் அதிபர் தேர்தலின் முடிவை மாற்றியிருக்கலாம் என்று சிலரால் நம்பப்படுகிறது.