இஸ்ரேலில் பெரும் தீ
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இஸ்ரேலிய தீயினால் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு

இஸ்ரேலின் மூன்றாவது பெரிய நகரான ஹைஃபாவில் பெரும் தீ பரவுவதை அடுத்து எண்பதினாயிரத்துக்கும் அதிகமான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

பிறிதொரு தீயினால், ஜெரூசலம் மற்றும் மேற்குகரையின் சொத்துக்களும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன.

தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகத்தில் இஸ்ரேலிய போலிஸார் பன்னிரெண்டு பேரை கைது செய்துள்ளனர்.

இந்த தீ வேண்டுமென்றே பரவச் செய்யப்பட்டிருந்தால் அது ஒரு பயங்கரவாத நடவடிக்கை என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.