கால்பந்து அணி பயணித்த விமானம் வீழ்ந்தது
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கால்பந்து அணி பயணித்த விமானம் வீழ்ந்தது-காணொளி

கொலம்பியாவில் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் பிரேசிலின் சாப்போகொயென்ஸ் ரியல் கால்பந்து அணியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் உட்பட குறைந்தது எழுபத்தைந்து பேர் கொல்லப்பட்டனர்.

ஐந்து பேர் உயிர் தப்பியதாக கூறப்படுகின்றது.

பொலிவியாவின் சாண்டா குருஸில் இருந்து புறப்பட்ட விமானம் மெடெலினில் நடக்கவிருந்த தென் அமெரிக்க கால்பந்து இறுதி ஆட்டத்துக்கான வீரர்களை ஏற்றிச் சென்றது.

மெடெலின் சர்வதேச விமானநிலையத்துக்கு தெற்கே முப்பது கிலோ மீட்டர்கள் தொலைவில், லா யூனியன் நகரை கடந்து சென்ற போது மின் கோளாறு குறித்து விமானம் அறிவித்துள்ளது. பின்னர் அது வீழ்ந்து நொருங்கியது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.