கால்பந்து ரசிகர்களின் சோக அஞ்சலி - காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கால்பந்து ரசிகர்களின் சோக அஞ்சலி - காணொளி

பிரேஸிலின் சப்பகொயென்ஸ் கால்பந்து அணியின் ரசிகர்கள், தமது அணியின் விளையாட்டை தாம் ரசித்த அதே மைதானத்தில், விமான விபத்தில் உயிர்நீர்த்த அணி வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த கூடியுள்ளனர்.

தமது வீரர்களை அவர்கள் அங்கு நினைவுகூர்கின்றனர்.

கொலம்பியாவில் இந்த அணி பயணித்த விமானம் வீழ்ந்து நொருங்கியதில் எழுபத்தியொரு பேர் கொல்லப்பட்டனர். ஆறு பேர் மாத்திரம் அதில் உயிர் தப்பினர்.

மூன்று நாட்களுக்கு துக்கம் அனுட்டிப்பதாக பிரேஸில் அறிவித்துள்ளது. விபத்து குறித்த புலன்விசாரணைகள் ஆரம்பித்துள்ளன.

இவை குறித்த பிபிசியின் காணொளி.