'ரொஹிஞ்சாக்கள் இனப்படுகொலை' - மலேசிய பிரதமர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'ரொஹிஞ்சாக்கள் இனப்படுகொலை' - மலேசிய பிரதமர்

மியான்மரில் ரொஹிஞ்சாக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக மலேசிய பிரதமர் நஜீப் ரஷாக் கண்டித்துள்ளார்.

அந்த மக்கள் மீதான கொடூர இராணுவ நடவடிக்கைகளை அங்கீகரித்தது குறித்து அவர் பர்மிய தலைவியான ஆங் சான் சூச்சியை கண்டித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான ரொஹிஞ்சாக்கள் வன்செயல்களில் இருந்து தப்பி ஓடியுள்ளனர்.

ஆனால், நஜீப் சொந்த நாட்டில் தனக்கு உள்ள அரசியல் விமர்சனங்களை திசைதிருப்ப இவ்வாறு பேசுவதாகவும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இவை குறித்த பிபிசியின் காணொளி.