ஆபத்தான ஆப்கானின் பெண் போலிஸ்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆபத்தான ஆப்கானின் பெண் போலிஸ்

  • 5 டிசம்பர் 2016

போலீஸ் அதிகாரியாக இருப்பதற்கு உலகிலேயே மிகவும் ஆபத்தான இடங்களில் ஒன்று ஆஃப்கானிஸ்தான்.

வளர்ந்து வரும் தலிபான் கிளர்ச்சி, நெரிசல் மிகுந்த சாலைகள் ஆகியவற்றுக்கு மத்தியில் போக்குவரத்து கடினமான இடமும் இதுதான்.

இவை ஆண் போலீசாருக்கே கஷ்டமாக இருக்குமானால் பெண்களின் நிலைமை என்ன?

அத்துடன், இந்த நாட்டில் பெண் பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.

இந்தப் பிரச்சனையை எவ்வாறு இவர்கள் கையாளுகிறார்கள் என்பதை அறிய காபூலின் மிகவும் ஆபத்தான சோதனைச் சாவடி ஒன்றுக்கு பிபிசி சென்றது.

.