மக்கள் கருத்து வாக்கெடுப்பில் இத்தாலிய அரசு தோல்வி-பிரதமர் பதவி விலகல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மக்கள் கருத்து வாக்கெடுப்பில் இத்தாலிய அரசு தோல்வி-பிரதமர் பதவி விலகல்

இத்தாலிய அரசு அரசியல் சாசன சீர்த்திருத்த நடவடிக்கைகளை விரும்பி மக்கள் ஆதரவைக் கோரியது. ஆனால் அந்த அரசியல் விளையாட்டில் அரசு தோல்வியடைந்தது.

இதையடுத்து பிரதமர் மேத்தியோ ரென்சி பதவி விலகுகிறார். எதிர்கட்சிகள் உடனடியாக பொதுத்தேர்தல் நடத்தவேண்டும் எனக் கோருகின்றன.

இந்த வாக்கெடுப்பு இத்தாலிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தும் இடையேயான உறவு குறித்து கேள்விகள் எழுப்பியுள்ளது.

கடந்த 70 ஆண்டுகளில் அங்கு 64 ஆட்சிகள் நடைபெற்றுள்ளன.