அலெப்போ திரும்பும் அசாத் ஆதரவுக் குடும்பங்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அலெப்போ திரும்பும் அசாத் ஆதரவுக் குடும்பங்கள்

  • 6 டிசம்பர் 2016

சிரியாவின் அலெப்போ நகரில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் உதவிகள் சென்று சேருவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் அங்கு ஏழு நாட்களுக்கு போர் நிறுத்தம் கோரும் ஐநா பாதுகாப்புக் கவுன்ஸிலின் தீர்மானத்தை சீனாவும், ரஷ்யாவும் தமது வீட்டோ வெட்டு வாக்குகள் மூலம் தடுத்துள்ளன.

அலெப்போ மக்களுக்கு உதவுவதற்கு பதிலாக சிரியாவின் அரசாங்கப்படைகள் அண்மையில் பெற்ற வெற்றிகளை தக்க வைக்க ரஷ்யா உதவுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

அதேவேளை அதிபர் அசாத்துக்கு ஆதரவான குடும்பங்களின் முதல் தொகுதியினர் பல வருட போருக்கு பின்னர் முதல் தடவையாக தமது இருப்பிடங்களுக்கு திரும்பியுள்ளனர்.

அவர்களை பிபிசி சந்தித்தது.