புடினை ஒழிக்க சதி நடப்பதாக மேலை நாடுகள் மீது கோர்பசேவ் குற்றச்சாட்டு

ரஷ்யாவை தூண்டும் விதமாக செயல்படுவதாவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பதவியிலிருந்து வெளியேற்ற திட்டம் தீட்டப்படுவதாகவும் மேலை நாடுகள் மீது ஒருங்கிணைந்த சோவியத் ஒன்றியத்தின் கடைசி அதிபரான மிக்கெயில் கோர்பசேவ் குற்றம்சாட்டியுள்ளார்.

Image caption புடினை ஒழிக்க சாதி நடப்பதாக மேலை நாடுகள் மீது கோர்பசேவ் குற்றச்சாட்டு

சோவியத் ஒன்றியம் உடைந்து 25 ஆண்டுகள் ஆனதை குறிக்கும் வகையில், பிபிசிக்கு மிக்கெயில்கோர்பசேவ் அளித்த பேட்டியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை இழிவுபடுத்தவும், அவரை ஒதுக்கி வைத்து பதவி விலக செய்யவும் மேற்கத்திய நாடுகளின் ஊடகங்கள் பிரத்யேக ஆணைகளை வழங்கியுள்ளதாக தான் நம்புவதாக தெரிவித்தார்.

கடந்த 1991-இல் ரஷ்யாவில் இருந்து பிரிந்து சென்ற சோவியத் குடியரசுகளின் தலைவர்கள் ஒரு பெருங் குற்றம் மற்றும் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு ஆகிய தவறுகளை செய்துவிட்டதாக கோர்பசேவ் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஒரு உள்நாட்டு போரினை தவிர்க்கவே, தான் அக்காலகட்டத்தில் பதவி விலகியதாக மிக்கெயில் கோர்பசேவ் மேலும் தெரிவித்தார்.

சோவித் யூனியன் சிதைந்ததற்கு கோர்பசேவ் தான் காரணம் என்று ரஷ்ய மக்களால் பழி சுமத்தப்பட்டாலும், பனிப்போரினை முடிவுக்கு கொண்டு வர உதவியதாக உலகெங்கும் ஒரு கதாநாயாகனாக கோர்பசேவ் பார்க்கப்படுகிறார்.

தொடர்புடைய தலைப்புகள்