ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் தலைமை நிர்வாகி எக்கல்ஸ்டோன் நீக்கம்

உலகப் பிரசித்தி பெற்ற ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் தலைமை நிர்வாகியாக, கடந்த நான்கு தசாப்தங்களாக பதவி வகித்த பெர்னி எக்கல்ஸ்டோன், அப்பதவியிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பெர்னி எக்கல்ஸ்டோன் நீக்கம்

எட்டு பில்லியன் டாலர்கள் செலவழித்து ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் பொறுப்புகளை தங்களின் உரிமையாக்கியுள்ள லிபர்டி மீடியா என்ற அமெரிக்க நிறுவனம், எக்கல்ஸ்டோனின் நீக்க நடவடிக்கையை அறிவித்துள்ளது.

ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தை, உலக அளவில் லாபகரமான வணிகமாக மாற்றிய 86 வயதாகும் பெர்னி எக்கல்ஸ்டோன், தலைமைப் பொறுப்பில் இருந்து தான் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளர்.

கடந்த சில ஆண்டுகளாக தொலைக்காட்சி பார்வையாளர்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து வரும் ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தை புதுப்பிக்கவும், இப்பந்தயத்தின் செல்வாக்கை குறிப்பாக அமெரிக்காவில் மேம்படுத்தவும் லிபர்டி மீடியா நிறுவனம் கவனம் செலுத்த விரும்புவதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்