பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடிக்குமா ஆம் ஆத்மி கட்சி ?

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், 72 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ள நிலையில் அதற்கு அடுத்தபடியாக ஆம் ஆத்மி 23 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

Image caption பஞ்சாப்பில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடிக்குமா ஆம் ஆத்மி கட்சி ?

பஞ்சாப் மாநிலத்தில் ஆளுங்கட்சியான அகாலி தள கூட்டணி மொத்தம் 19 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

பஞ்சாப் மாநில தேர்தலில் புதிதாக களம் கண்டுள்ள ஆம் ஆத்மி 23 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், பஞ்சாப்பில் புதிய எதிர்க்கட்சியாக ஆம் ஆத்மி கட்சி உருவாகுமா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்