இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை: டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமென்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என அ.தி.மு.க. சசிகலா பிரிவின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்.

இரட்டை இலை சின்னம் முடக்கம்; அதிமுக பெயரையும் பயன்படுத்த தடை

அதிர்ச்சியளிக்கும் முடிவு: ஓ.பி.எஸ்

படத்தின் காப்புரிமை AIADMK
Image caption டிடிவி தினகரன்

இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியதாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவு வெளியான சில நிமிடங்களுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், "தங்கள் சார்பில் முன்வைக்க வேண்டிய அனைத்து வாதங்களையும் முன்வைத்த நிலையில், இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை" என்று தெரிவித்தார்.

மேலும், எம்.ஜி.ஆர். மறைந்தபோது இதேபோன்ற நிலை ஏற்பட்டாலும் ஜெயலலிதாவுக்கு சின்னம் கிடைத்ததைப் போல தங்களுக்கும் கிடைக்கும் என தினகரன் நம்பிக்கை தெரிவித்தார்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகுவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் சின்னம் முடக்கப்பட்டாலும் தான் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடுவது உறுதியென்றும் தினகரன் தெரிவித்தார்.

இதனால், தி.மு.கவின் வெற்றிவாய்ப்பு அதிகரித்திருப்பதாகத் தான் கருதவில்லையென்றும் தினகரன் கூறினார். வியாழக்கிழமை காலையில் ஆர்.கே. நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யப்போவதாகவும் தினகரன் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்