பணியாளர்களுக்கு 6 சதம், அதிகாரிக்கு 60 சதமா? இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி ஆட்சேபம்

  • 3 ஏப்ரல் 2017

இன்ஃபோசிஸ் நிறுவனரும், உறுப்பினருமான என்.ஆர். நாரயணமூர்த்தி, அந் நிறுவனத்தின் ஊதிய உயர்வு குறித்து கொள்கை குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR/AFP/Getty Images
Image caption நாராயணமூர்த்தி

"தி இண்டியன் எக்ஸ்பிரஸ்" நாளிதழ் வெளியிட்ட செய்திகளின்படி, நாராயணமூர்த்தி, இன்ஃபோசிஸ் நிர்வாகத்திற்கு எழுதிய கடிதத்தில், நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரவீண் ராவுக்கு கொடுக்கப்பட்ட அபரிமிதமான ஊதிய உயர்வு குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார்.

"நிறுவனத்தின் பிற பணியாளர்களுக்கு 6 முதல் 8 சதவிகித ஊதிய உயர்வும், உயரதிகாரிக்கு 60-70 சதவிகித ஊதிய உயர்வும் கொடுப்பது நியாயமனதாகத் தெரிவில்லை" என்று அவர் தனது கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

நாம் என்ன சாப்பிடுவது என்பதை முடிவு செய்வது யார்?

நிறுவனத்தின் பெரும்பான்மையான பணியாளர்களிடையே இவ்வாறு பாகுபாடு காண்பித்தால் அது, நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை குறைக்கும் என்று அவர் எழுதியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை MANJUNATH KIRAN/AFP/Getty Images

நாராயண மூர்த்தியின் இந்த கடிதத்தைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் இன்ஃபோசிஸ் வைரலாக பரவியது.

நியான் (@buffer340) டிவிட்டர் செய்தியில் கூறுகிறார்:, "வட இந்தியர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்கள். செலவுகளை பார்க்கும் போது, அது பத்தாயிரம் ரூபாய்க்கு சமமாக இருக்கிறது".

செவ்வாய் கிரகத்திலிருந்து வெளியேறிய காற்று மாயமானது எங்கே?

சென்னை அருகே ஜெர்மன் பெண் மீது பாலியல் தாக்குதல்

இது அமித் குமாரின் (@amitkumarz) டிவிட்டர் செய்தி, "மூர்த்தி சரியாகவே சொல்கிறார். மற்ற பணியாளர்களுக்கு ஐந்து முதல் பத்து சதவிகித ஊதிய உயர்வு கொடுத்துவிட்டு, உயரதிகாரிகளுக்கு 60-70 சதவிகித ஊதிய உயர்வு கொடுப்பது தவறான நிர்வாகத்தையே காட்டுகிறது".

இதுவும் படிக்கப் பிடிக்கலாம்:

திரைப்பட விமர்சனம்: கவண்

ஹிப்ஹாப் தமிழாவின் பின்னணி இசை ஓகே என்றாலும் பாடல்களில் "தீராத விளையாட்டுப் பிள்ளை" மட்டுமே மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.

கவண் படம் சொல்லும் கதை என்ன?

தொடர்புடைய தலைப்புகள்