சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது

தீ விபத்துக்குள்ளானதால் தற்போடு இடிக்கப்பட்டுவரும் சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி இன்று காலையில் இடிந்து விழந்தது.

சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையில் இயங்கிவந்த சென்னை சில்க்ஸ் என்ற 7 மாடிகளைக் கொண்ட கட்டடத்தில் கடந்த மே 31ஆம் தேதி அதிகாலையில் தீ பிடித்தது.

இரண்டு நாட்களுக்கு மேல் போராடி இந்தத் தீ அணைக்கப்பட்டது. இதையடுத்து ஜூன் 2ஆம் தேதியன்று இந்தக் கட்டடத்தை இடிக்கும் பணிகள் துவங்கின.

கட்டடத்தின் பிற்பகுதியில் உள்ள இடத்தில் மண் குவிக்கப்பட்டு, அதன் மீது எந்திரங்கள் ஏற்றப்பட்டு கட்டடத்தை இடிக்கும் பணிகள் துவங்கின.

தொடர்புடைய செய்திகள்:

இந்த நிலையில், இன்று காலையில் கட்டத்தின் பிற்பகுதியில் இருந்து ஏழாவது தளத்தின் தூண்களை பலவீனமாக்கும் பணிகள் துவங்கின.

அதற்குப் பிறகு ஆறாவது தளத்தின் தூண்களையும் பலவீனமாக்கியபோது கட்டடத்தின் முகப்பில் ஒரு பகுதி, சென்னை சில்க்ஸ் பெயர்ப் பலகை உள்ள பகுதி ஆகியவை சரிந்து விழுந்தன.

இந்தப் பகுதிகள் அருகில் உள்ள வங்கிக் கட்டடத்தின் மீதும் சாலையிலும் விழுந்தன.

உஸ்மான் சாலையில் தற்போதும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருப்பதால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இன்னும் சில நாட்களில் இந்தக் கட்டடம் முழுமையாக தரைமட்டமாக்கப்படும் என கட்டட இடிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

பிற செய்திகள்

கத்தாருக்கு 5 விமானங்களில் உணவு அனுப்பியது இரான்

திரைப்பட விமர்சனம் : புலிமுருகன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்