அமர்நாத் யாத்திரை: இதுவரை நடந்தது என்ன?

காஷ்மீர் மாநிலம் அனந்த்நாகில் அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட யாத்ரீகர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களும், காயமடைந்தவர்களும் அரசு ஏற்பாடு செய்திருந்த விமானம் மூலம் குஜராத் சென்றடைந்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஜம்மு-காஷ்மீர் மாநில முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி, ஆளுநர் என்.என்.வோரா, துணை முதலமைச்சர் நிர்மல் சிங் உள்ளிட்ட பலர், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்ரீநகரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

திங்கட்கிழமையன்று இரவு அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏழு பேர் உயிரிழந்தனர், 17 பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

தாக்குதலின் சூத்திரதாரி

ஸ்ரீநகரில் காஷ்மீர் பகுதியின் காவல்துறை தலைமையதிகாரி முனீர்கானின் கருத்துப்படி, அனந்த்நாகில் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தியது லஷ்கர்-இ-தொய்பா என்றாலும், இதற்கு சூத்திரதாரி, பாகிஸ்தான் தீவிரவாதி இஸ்மாயில்.

தாக்குதலுக்கு உள்ளான பேருந்து ஓட்டுனர் குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்தவர்.

Image caption தாக்குதலுக்கு உள்ளான பஸ்

அவசரக்கூட்டம்

தாக்குதல் தொடர்பாக ஆலோசனை நடத்த, மாநில முதலமைச்சர் செவ்வாய்க்கிழமையன்று அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

"ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்துவதற்கு இதுவே போதுமான காரணம், இது எனது தனிப்பட்ட கருத்து. யாத்திரையை நிறுத்தாமல் தொடரவேண்டும். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் தலைவர் கருண் சிங் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதையும் படிக்கலாம்:

கால்நடை விற்பனைக் கட்டுப்பாடு சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடை

டோனட் உண்பதில்லை என்று முஸ்லிம்கள் புரளி பரப்புவது ஏன்?

கத்தாருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

உலகின் குட்டி நாட்டின் மக்கள் தொகை 11 பேர்!

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்