கேரளா வெள்ளம்: அவலநிலையை சொல்லும் புகைப்படங்கள்

இதை பகிர Email இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர வாட்ஸ்அப்

கடந்த நூறு ஆண்டுகளில் கேரளா மிக மோசமான வெள்ள பாதிப்பைச் சந்தித்திருக்கிறது என்கிறார் முதல்வர் பினராயி விஜயன்.

Image copyright Getty Images

இந்த பெருவெள்ளத்தில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளன. பலர் வீடுகளை இழந்துள்ளனர். முந்நூறுக்கும் அதிகமானோர் உயிர் இழந்திருக்கிறார்கள்.

Image copyright Getty Images

இதற்கென மத்திய அரசு முதற்கட்ட தற்காலிக நிவாரண நிதியாக 500 கோடி ரூபாய் ஒதுக்கியது.

இந்தியாவின் பல மாநில அரசுகளும் தங்கள் பங்கிற்கு சில கோடிகளை கேரள வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக வழங்கியுள்ளன.

Image copyright Getty Images

கேரள வெள்ளத்தின் அவல நிலையை கேள்விப்பட்ட ஐக்கிய அரபு எமிரேட்டுகள் பிரதமர் '' கேரள மக்கள் தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு வழங்கிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்றும் கேரளா சகோதரர்களுக்கு உதவுவது கடமை'' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

செயற்பாட்டாளர்களும், தன்னார்வலர்களும் களத்தில் இறங்கி நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Image copyright Getty Images

வெள்ள சேதத்தையும், அது குறித்த செய்திகளையும் வெளி உலகின் பார்வைக்கு எடுத்து சென்றதில் புகைப்படகலைஞர்களின் பணி மகத்தானது.

கேரளாவின் மிக மோசமான வெள்ள பாதிப்புகளை புகைப்படம் மூலம் உலகுக்குக் தெரியப்படுத்தி வருகிறார்கள் புகைப்பட கலைஞர்கள். இன்று உலக புகைப்பட தினம். கேரளா வெள்ளத்தின் பாதிப்புகள் குறித்த சிறு புகைப்படத் தொகுப்பை வாசகர்களுக்கு இங்கே வழங்குகிறோம்.

Image copyright Getty Images
Image copyright Getty Images
Image caption ஆலுவாவில் கோழிகள் வெள்ளத்தின் மத்தியில் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்படுகிறது.
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்
Image copyright Getty Images
Image caption எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா பகுதியில் வசிப்பவர்களை வெளியேற்றும் பணியில் ராணுவம்.
Image copyright Hindustan Times
Image caption பந்தனம்திட்டா மாவட்டத்தில் வெள்ளத்துக்கு மத்தியில் செல்லும் அவசரஊர்தி
Image copyright Getty Images
Image caption கொச்சியில் வெள்ளம் நிறைந்த பகுதி ஒன்றில் விமானம் மூலம் மீட்கப்படும் சிறுவர் .
Image copyright Hindustan Times
Image caption பந்தனம்திட்டாவில் வெள்ள நீரில் சிக்கிக்கொண்ட வாகனத்தை தள்ளும் மக்கள்
Image copyright NDRF Officials
Image caption பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்கும் மீட்பு படை வீரர்
Image copyright NDRF Officials
Image caption படகு வழியாக ஒரு குடும்பத்தை பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்லும் மீட்பு படை வீரர்கள்
Image copyright Getty Images
Image copyright Getty Images

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :