சர்ச்சையை உண்டாக்கிய உடை விற்பனையை திரும்பப் பெற்றது டிஸ்னி

தனது புதிய திரைப்படமான ''மோனா'' வில், கிறிஸ்துவ பண்டிகையான ஹாலோவீன் நாளின் போது அணியப்படும் குழந்தைகளுக்கான ஹாலோவீன் உடையாக மேம்படுத்தப்பட்ட, டாட்டூவால் (பச்சை குத்துதல்) அலங்கரிக்கப்பட்ட பழுப்பு நிற தோல் அங்கியை டிஸ்னி நிறுவனம் விற்பனையிலிருந்து விலக்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை Disney
Image caption சர்ச்சையை உண்டாக்கிய உடை

புற்களாலான பாவாடை மற்றும் எலும்பு அட்டிகை ஆகியவைகளை உள்ளடக்கிய இந்த உடையலங்காரம் பாலினீசிய போர்க் கடவுளான மோயியை சித்தரிக்கும் விதமாக உள்ளது.

டிஸ்னி நிறுவனத்தின் இந்த செயல், ஒரு கலாசார அபகரிப்பு என்று பசிபிக் தீவுகளை சேர்ந்த ஆர்வலர்கள், டிஸ்னி பொழுதுபோக்கு நிறுவனம் மீது குற்றம்சாட்டினர்.

தங்கள் நிறுவனத்தின் செயல்பாட்டினால் இது தொடர்பாக பிறருக்கு ஏதேனும் அவமதிப்பு நிகழ்ந்திருந்தால், அதற்கு மன்னிப்பு கோருவதாக டிஸ்னி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பருத்த உடல் தேகம் கொண்டதாக மோயி தோன்றும் அசைவூட்டத்தின் (அனிமேஷன்) திரை முன்னோட்டத்தால் சினமடைந்துள்ள சிலர், பசிபிக் தீவுகளில் உள்ள அதிக எடையுள்ள மக்களை பரிகாசம் செய்யும் விதமாக இது உள்ளதாக தெரிவித்தனர்.

தொடர்புடைய தலைப்புகள்