திகில் திரைப்பட இயக்குநர் ஹர்ஷல் கார்டன் லூயிஸ் மரணம்

''திகிலூட்டும் காட்சிகளின் ஞானப்பிதா' (காட்ஃபாதர் ஆஃ ப் கோர் ) என்றழைக்கப்பட்ட திகில் வகை திரைப்பட இயக்குநரான ஹர்ஷல் கார்டன் லூயிஸ், அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடாவில் காலமானார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption ஹர்ஷல் கார்டன் லூயிஸ்

அவருக்கு வயது 86.

1963-ஆம் ஆண்டு வெளியான குறைந்த செலவில் எடுக்கப்பட்ட அவரது 'பிளட் ஃபீஸ்ட்' திரைப்படம், 'ஸ்ப்ளாட்டர்' வகை என்றழைக்கப்படும் கோரக் காட்சிகளைத் தத்ரூபமாகக் காட்டும் திரைப்படங்களில் முதல் திரைப்படம் என்று கருதப்படுகிறது.

இத்தகைய தத்ரூப சித்தரிப்புகள். மற்றும் வன்முறை காட்சிகள் குறிப்பிடத்தக்க வகையில் `ஸ்ப்ளாட்டர்` வகை திரைப்படங்களில் அமைந்திருக்கும்.

விளம்பரத்துறை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுகளிலும் ஹர்ஷல் கார்டன் லூயிஸ் பணியாற்றியுள்ளார்.

1970-களில் மோசடி குற்றச்சாட்டின் காரணமாக மூன்று ஆண்டுகள் அவர் சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்