பிரபல போலந்து திரைப்பட இயக்குநர் ஆன்ஜை வைய்டா மறைவு

பிரபல போலந்து திரைப்பட இயக்குநர் ஆன்ஜை வாய்டா தன்னுடைய 90-வது வயதில் காலமாகியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption இயக்குநர் ஆன்ஜை வாய்டாவின் பல திரைப்படங்கள் போலந்தின் கொந்தளிப்பான வரலாற்றால் தூண்டப்பட்டவை

60 ஆண்டுகள் திரையுலகிற்கு பங்காற்றிய அவரது இறப்பை போலந்து திரைப்படத் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு உறுதி செய்திருக்கிறது.

இரண்டாம் உலக போர் பற்றிய மூன்று படத் தொடர்களால் 1950-களில் வைய்டா பிரபலம் அடைந்தார்.

2000 ஆம் ஆண்டு திரையுலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்கு வழங்கப்பட்ட கௌரவ ஆஸ்கார் விருது உள்பட பல சர்வதேச விருதுகளை சொந்தமாக்கி கொண்டவர் இவர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption 2000 ஆம் ஆண்டு ஜேன் ஃபொன்டாவிடம் இருந்து ஆஸ்கார் கௌரவ விருது பெறும் வைய்டா

போலந்தின் தொழிற்சங்கமான, சாலிடாரிட்டி, பற்றிய "மேன் ஆப் ஐயன்", ( இரும்பு மனிதன்) படம் , 1940 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தால் நடத்தப்பட்ட, அவருடைய தந்தையும் பாதிக்கப்பட்டோரில் ஒருவராக இருந்த, போலந்து படை அதிகாரிகள் படுகொலை பற்றிய "கெற்றின்" ஆகிய அவரது படைப்புக்கள் மிகவும் பாராட்டப்படுபவை.

“மேன் அப் ஐயன்” என்ற திரைப்படம் 1981 ஆம் ஆண்டு கான் திரைப்பட விழாவில் பால்ம் தோ`ர் விருது பெற்றது.

"இறைவன் இயக்குநர்களுக்கு இரண்டு கண்களை வழங்கியுள்ளார். ஒன்று கேமராவை பார்க்கவும், இன்னொன்று அவரை சுற்றி நடக்கின்ற அனைத்தையும் பார்ப்பதற்காகவும்" என்று வைய்டா கூறியிருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்