பாடலாசிரியர் பாப் டிலன் நோபல் பரிசை முறையாக ஏற்கவில்லை என குற்றச்சாட்டு

  • 22 அக்டோபர் 2016

இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை ஏற்பதாக முறையாக அறிவிக்காமல் இருப்பதால், அமெரிக்க பாடகர் பாப் டிலன், மரியாதையற்றவர், திமிர்பிடித்தவர் என்று ஸ்வீடன் அகாடமியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சர்ச்சையில் பிரபலம்

நோபல் பரிசு பெறும் முதல் பாடலாசிரியராக பலரும் ஆச்சரியமடையும் வகையில் கடந்த வாரம் டிலன் அறிவிக்கப்பட்டார்.

ஆனால், அவரை தொடர்பு கொள்ள எடுத்த தொடர் முயற்சிகளுக்கு பின்னரும், அவரிடம் இருந்து எந்தவொரு மறுமொழியும் அகாடமிக்கு இன்னும் கிடைக்கவில்லை.

இத்தகைய நிலைமை இதற்கு முன் ஏற்பட்டதில்லை என்று ஸ்வீடன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பெர் வாஸ்ட்பெர்க் தெரிவித்துள்ளார்.

இந்த நோபல் பரிசு பற்றிய ஒரு சிறு மேற்கோள் இந்த பாடகர் நட்சத்திரத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேறியிருந்தது. ஆனால், பின்னர் அது அகற்றப்பட்டுவிட்டது.

நோபல் பரிசு பெறுவோராக அறிவிக்கப்பட்டுள்ளோர் டிசம்பர் மாதம் ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் விருதைப் பெற்று கொள்வர்.

தொடர்புடைய தலைப்புகள்