நோபல் பரிசு குறித்த டிலனின் மௌன ரகசியம் – பேச்சற்றுப் போயிருந்தாராம்!

  • 29 அக்டோபர் 2016

இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படவிருக்கும், அமெரிக்கப் பாடகர் பாப் டிலன், அந்த அறிவிப்பு குறித்து கடந்த இரண்டு வாரங்களாக கடைப்பிடித்துவரும் மௌனத்தைக் கலைத்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption அமெரிக்கப் பாடகர் பாப் டிலன்

நோபல் பரிசு தரும் ஸ்வீடிஷ் அக்கெடெமியுடன் டிலன் தொடர்பு கொண்டு பேசியதாகவும், இந்த விருதுக்கு தான் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்பு தன்னை பேச்சற்றுப் போகச் செய்துவிட்டதாக அவர் கூறினார் என்றும் நோபல் ஃபவுண்டேஷன் கூறியது.

ஸ்டாக்ஹோம் நகரில், டிசம்பர் மாதம், நோபல் பரிசுகள் வழங்கப்படும் நோபல் வார நிகழ்ச்சிகளில் டிலன் கலந்துகொள்வாரா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று இந்த ஃபவுண்டேஷன் கூறியது.

ஆனால், பிரிட்டிஷ் பத்திரிகையான , டெய்லி டெலெகிராஃபுக்கு அளித்த பேட்டி ஒன்றில், சாத்தியமானால் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போவதாகக் கூறியிருக்கிறார்.

இந்த விருது அவருக்கு அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்துக்குப் பின், இந்த விருது குறித்து டிலன் சாதிக்கும் முழுமையான மௌனம் மற்றும் ஸ்வீடிஷ் அக்கெடெமியுடன் அவர் பேச மறுத்த்து ஆகியவை முன்னுதாரணமற்றவை என்று அந்த அமைப்பின் ஒரு உறுப்பினர் கூறியிருந்தார்.