மனதை மயக்கும் சுற்றுலா தலங்கள் (புகைப்படத் தொகுப்பு)

இயற்கை எழில் மிக்க மலைப் பகுதிகள், பேரழகை உள்வாங்கியுள்ள கடற்கரைகள், ஆபத்தையும், அழகையும் ஒருங்கே கொண்டுள்ள பள்ளத்தாக்குகள், இயற்கையோடு பின்னி பிணைந்துள்ள காடுகள், ஆர்ப்பரித்து பாயும் நதிகள் என்று உலகில் ரசிப்பதற்கும், இயற்கையோடு வாசம் செய்வதற்கு ஏராளமான இடங்கள் உண்டு. அவற்றில் சில இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

இயற்கை எழில் மிக்க யார்க்க்ஷயர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இங்கிலாந்தில் உள்ள யார்க்ஷர் பிரதேசம், பழமைக்கும், இயற்கை எழிலுக்கும் பிரசித்தி பெற்றதாகும். கடந்த 2014-இல் லோன்லி பிளானட் என்ற உலகப் புகழ் பெற்ற பயணப் புத்தகம் யார்க்‌ஷயரை உலக அளவில் சுற்றுலாவாசிகள் பார்ப்பதற்கு சிறந்த இடம் என்று குறிப்பிட்டுட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

எண்ணற்ற வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், தேவாலயங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் கொண்ட அமெரிக்காவின் ஜார்ஜியா கடற்கரையில் கடலின் அழகை ரசிப்பதற்கும், சுற்றுலாவாசிகளின் சுதந்திரத்துக்கும் என்றும் உத்தரவாதமுண்டு.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பச்சைப் பசேலென காணப்படும் போர்ச்சுகல் நாட்டில் உள்ள அஜோர்ஸ் பகுதி, ஐரோப்பாவுக்கு வரும் சுற்றுலா பணிகளின் விருப்பமான இடமாகவும், அமைதியை விரும்புவர்களின் ஆதரவினை பெற்ற இடமாகவும் திகழ்கிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இமய மலை சாரலில் உள்ள இந்திய மாநிலமான சிக்கிம், நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்கு அருகே உள்ளது. உலகின் மூன்றாவது பெரிய மலையான கஞ்சன்ஜங்கா மலை உள்பட பல குன்றுகள் ,மலை பிரதேசங்கள் நிரம்பிய சிக்கிம், ஆண்டு தோறும் எண்ணற்ற சுற்றுலாவாசிகளை ஈர்க்கிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கடற்கரை மற்றும் சூரிய குளியல் பிரியர்களின் அமோக ஆதரவை பெற்றது ஆஸ்திரேலிய கடற்கரைகள் தான். எந்த குறுக்கீடும் இல்லாமல் சுற்றுலாவாசிகள் கடலின் அழகோடு தங்களை மறந்து ஓய்வெடுக்க சிட்னி கடற்கரை போன்ற பல கடற்கரைகள் ஆஸ்திரேலியாவில் உள்ளன.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

ஆல்ப்ஸ் மலையின் வடக்கே அமைந்திருக்கும் ஜெனீவா ஏரி, சுற்றுலாவாசிகளை மெய் மறக்க வைக்கும் ஸ்தலமாகும். சுவிட்ஸர்லாந்து மற்றும் பிரான்ஸ்ஆகிய இரு நாடுகளுக்கும் பொதுவான இந்த ஏரியின் அழகியல் தன்மை காண்போரை பரவசப்படுத்தக்கூடியது.

பட மூலாதாரம், DENNIS TURNER/GEOGRAPH

படக்குறிப்பு,

அயர்லாந்தின் ஸ்கெல்லிங் ரிங் பகுதியில் நாம் காண்பதெல்லாம் பசுமை மட்டுமே. நீண்ட மற்றும் பரந்த பாதைகளை கொண்ட இப்பகுதியில் அண்மை காலமாக சுற்றுலாவாசிகள் பெரும் எண்ணிக்கையில் படை எடுத்து வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

விலங்குகளை அருகில் இருந்து பார்ப்பதற்கும், காட்டில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருக்கும் கூண்டுகளில் இரவு முழுவதும் தங்கியிருந்து காட்டு விலங்குகளின் செய்கைகளை இயற்கை சூழலில் கவனிப்பதற்கும் உலகின் தலை சிறந்த இடம் தென் ஆப்ரிக்க சஃபாரிகள் தான்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

உலகின் மிகவும் ஆழமான பள்ளத்தாக்குகளில் ஒன்றான பெரு நாட்டில் உள்ள கோக்கேகைரோ, மலையேற்ற பிரியர்களின் விருப்ப ஸ்தலமாகும். கண்கவர் இயற்கை அழகு மிக்க கோக்கேகைரோ சாகச பிரியர்களை நாளும் ஈர்க்கிறது.