ஏலத்தில் 8.5 லட்சம் டாலர்களுக்கு விலைபோன 'பத்து கட்டளைகள்'

உலகின் மிகப் பழமையானதாகக் கருதப்படும் 'பத்து கட்டளைகள்’’ செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் அமெரிக்காவில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடைபெற்ற ஏலத்தில் எட்டு லட்சத்தி ஐம்பதாயிரம் டாலர்களுக்கு விலை போனது.

படத்தின் காப்புரிமை AP
Image caption சமாரிடன் என்ற ஹீப்ரு எழுத்து வடிவத்தில் பொறிக்கப்பட்ட பத்து கட்டளைகள்

இரண்டு சதுர மீட்டருக்கும் குறைவான இந்த பளிங்குப் பலகை, சமாரிடன் என்ற முற்கால ஹீப்ரு எழுத்து வடிவத்தில் பொறிக்கப்பட்டதாகும்.

இஸ்ரேலில் உள்ள யூதர் வழிபாட்டுத் தலத்தின் நுழைவாயிலில் கி.பி. 300-ஆம் ஆண்டு முதல் கி.பி. 500-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த பலகை அடையாளமாக குறிக்கப்பட்டிருக்கலாம் என்று ஏலதாரர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், மூலமுதலான பத்து கட்டளைகளில் ஒன்பது கட்டளைகளை மட்டுமே இறை நம்பிக்கையாளர்களால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்துள்ளது. பத்தாவது கட்டளை அப்போதைய உள்ளூர் சமாரிடன் ஆட்சியின் கட்டளையாக கருதப்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்