ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் தவறான படத்தை அறிவித்ததால் குழப்பம்

சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் தவறான திரைப்படம் விருதுக்கு அறிவிக்கப்பட்டதால் ஆஸ்கார் விருது வழங்கும் விழா கேலிக்கூத்தாக முடிவடைந்தது.

படக்குறிப்பு,

விழா மேடையில் தவறு நடந்ததை உணர்ந்தவர்களின் முகபாவம்

திரைத்துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செலஸ் நகரில் நடைபெற்றது. 89-ஆவது ஆஸ்கார் விருது விழாவான இதில் 24 பிரிவுகளில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

''லா லா லேண்ட் ''என்ற திரைப்படம் 14 பிரிவுகளிலும் 'மூன்லைட்', 'அரைவல்' ஆகிய திரைப்படங்கள் 8 பிரிவுகளிலும் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆஸ்கார் விருதுபெறும் சிறந்த திரைப்படமாக இசைத் திரைப்படமான லா லா லேண்ட் அறிவிக்கப்பட்டது. அத்திரைப்படத்துடன் தொடர்புடைய நட்சத்திரங்கள் மற்றும் படைப்பு குழுவினர் தங்களின் ஏற்புரையையும் நிகழ்த்தத் தொடங்கிவிட்டனர். அப்போது , ஒரு தயாரிப்பாளர் குறுக்கிட்டு 'மூன்லைட்' திரைப்படத்துக்குத்தான் விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த அறிவிப்பை வெளியிட்டவரும், நடிகருமான வாரன் பெய்ட்டி வெற்றித் திரைப்படம் தொடர்பாக தன்னிடம் தவறான உறை அளிக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்