ஆஸ்கார் விருதுகள்: சிறந்த நடிகர், நடிகை விருதை வென்ற கேஸி அஃப்லெக் மற்றும் எம்மா ஸ்டோன்

ஆஸ்கார் சிறந்த திரைப்பட விருதைத் தவறவிட்ட ''லா லா லேண்ட்'' திரைப்பட குழுவினர் ஆறுதல் அடையும் வகையில் சில விருதுகள் கிடைத்துள்ளன.

படக்குறிப்பு,

ஆஸ்கார் சிறந்த நடிகை விருதை வென்ற நெகிழ்ச்சியில் எம்மா ஸ்டோன்

''லா லா லேண்ட்'' திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவரான எம்மா ஸ்டோன் சிறந்த நடிகையாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இத்திரைப்படத்தின் இயக்குனரான டேமியன் ஷசேல், ஆஸ்கார் வரலாற்றில் சிறந்த இயக்குநர் விருதை வென்ற இளம் இயக்குநர் என்ற பெருமையை பெருமையை தனது 32-ஆவது வயதில் பெற்றுள்ளார்.

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை ''மான்செஸ்டர் பை த சீ'' திரைப்படத்தில் நடித்த கேஸி அஃப்லெக் வென்றார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் ஆஸ்கார் விருதை வென்ற கறுப்பின நடிகர்கள் என்ற பெருமையை முஹர்ஷல்லா அலி மற்றும் வியோலா டேவிஸ் ஆகியோர் பெற்றனர்.

''மூன் லைட்'' திரைப்படத்தில் தனது பங்களிப்புக்காக மஹர்ஷல்லா அலி சிறந்த துணை நடிகர் விருதை பெற்றார். அதே வேளையில், ''ஃபென்சஸ்'' திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்துக்காக வியோலா டேவிஸ் சிறந்த துணை நடிகை விருதை பெற்றார்.

படக்குறிப்பு,

ஆஸ்கார் விருதை பெற்ற நட்சத்திரங்கள்

இரானிய திரைப்படமான ''தி சேல்ஸ்மேன்'' திரைப்படத்துக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படம் விருது கிடைத்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்