புனிதரின் காதல்: படைப்பாளிகளுக்கும் பழமைவாதிகளுக்கும் மோதல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

புனிதரின் காதல்: படைப்பாளிகளுக்கும் பழமைவாதிகளுக்கும் மோதல்

ரஷ்யாவின் கடைசி ஜார் இளவரசரின் காதல் கதையை படமாக்கியிருப்பது அவரை இழிவு படுத்துவதாக பழமைவாத ரஷ்யர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை தடை செய்யவேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள்.

ரஷ்யாவின் கடைசி ஜார் இளவரசர் அரியணை ஏறுவதற்கு முன் பேலட் நடனமங்கை ஒருவருடன் அவருக்கிருந்த தொடர்பை இந்த திரைப்படம் சித்தரிக்கிறது.

இந்த திரைப்படத்துக்கு எழுந்திருக்கும் எதிர்ப்பு, கலைஞர்களின் படைப்புச் சுதந்திரத்துக்கு எதிரானது என்று இந்த திரைப்படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பழமைவாதிகளுக்கும் படைப்பாளிகளுக்கும் இடையிலான மோதலாக வெடித்திருக்கும் இதன் பின்னணி என்ன? விளக்குகிறது இந்த காணொளி.