லெக்கின்ஸ் ஆபாச உடையா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

லெக்கின்ஸ் ஆபாச உடையா?

அமெரிக்காவின் யுனைடட்ஏர்லைன்ஸ் விமானம் லெக்கின்ஸ் அணிந்திருந்த இரண்டு பெண்கள் பயணிக்கத் தடை விதித்தது.

அவர்கள் பயணித்த சலுகை கட்டண பயணச்சீட்டிற்கு உடை கட்டுப்பாடுஉண்டு என்பதாலேயே அவர்கள் தடுக்கப்பட்டதாக யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மற்ற பயணிகள் விரும்பிய உடைகளை அணிந்து பயணிப்பதை தாம் தடுக்கவில்லை என்றும் அந்த அமெரிக்க நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

ஆனாலும் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு குறித்த சர்ச்சை முடிவதாக தெரியவில்லை.

அமெரிக்காவில் லெக்கின்ஸ் என்றும் யோகா காற்சட்டை என்றும் அழைக்கப்படும் இந்த உடை சர்ச்சைக்குள்ளாவது இது முதல்முறையல்ல.

லெக்கின்ஸை தரக்குறைவான ஆடையாக அறிவிக்கும்படி 2015ஆம் ஆண்டு மோண்டானா சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்தார்.

அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. ஆனாலும் அமெரிக்காவில் லெக்கின்ஸ் இன்னமும் சர்ச்சைக்குரிய உடையாகவே திகழ்கிறது.

பல அமெரிக்க பள்ளிகளில் வகுப்பறைகளில் லெக்கின்ஸ் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

லெக்கின்ஸ் வீட்டில் மட்டுமே அணிவதற்கான உடையா? பொதுவெளியில் இதை தடுப்பது பழமைவாத கண்ணோட்டமா? ஆணாதிக்க சிந்தனையா? என்கிற கேள்விகள் எழுகின்றன.

இந்த கேள்விகளுக்கான பொதுமக்களின் கருத்து இன்னமும் பிளவுபட்டே இருக்கிறது.