மொய்ப்பணம் வாங்க மெஷின்கள் தயார்

மொய்ப்பணம் வாங்க மெஷின்கள் தயார்

ஜிம்பாப்வேவில் திருமணத்தில் மொய்ப்பணம் தரும் கலாச்சாரம் புதிய தொழில்நுட்ப மேம்பாட்டை காண்கிறது.

நாட்டில் நிலவும் நாணயத்தட்டப்பாடு காரணமாக அங்கே ரூபாய்நோட்டுக்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் நிலவுகிறது.

இது திருமணத்தில் மொய் எழுதும் ஜிம்பாப்வே கலாச்சாரத்தில் பெரும் சிக்கலை தோற்றுவித்திருக்கிறது.

இந்த பிரச்சனைக்குத் தீர்வாக, உள்ளூர் வங்கிகள் நிதியட்டைகளில் இருந்து பணமெடுக்கும் இயந்திரங்களை வாடகைக்கு விட ஆரம்பித்துள்ளன.

இந்த நிதியட்டை இயந்திரங்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி நிலவுவதாக தெரிவித்தார் ஸ்டுவார்ட் வங்கி அதிகாரி ஸ்விசபெரா கடியோ.

“நிதியட்டை இயந்திர தட்டுப்பாடு காரணமாக பல சமயங்களில் ஒரு ஆளுக்கு இத்தனை நிதியட்டை இயந்திரங்கள் தான் தரமுடியுமென கட்டுப்பாடுகள் விதிக்க நேர்கிறது”, என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

திருமணங்களில் இந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டிருப்பது வரும் விருந்தினர்களுக்கும் வசதியாக இருக்கிறது.

“என்னால் பணம் கொண்டுவர முடியவில்லை ஆனால் என்னிடம் என்னுடைய நிதியட்டை இருக்கிறது. இங்கே நிதியட்டை இயந்திரங்கள் இருப்பது ஆச்சரியமளித்தது; மகிழ்ச்சியாகவும் இருக்கிறது”, என்கிறார் திருமணத்துக்கு வந்த விருந்தினர் ருடோ மஞெங்க்வா.

நாணயத்தட்டுப்பாட்டுக்கு மாற்றாக வங்கிகள் வாடகைக்கு விடும் நிதியட்டை இயந்திரங்கள், ஜிம்பாப்வே மணமக்களுக்கும் அவர்களை வாழ்த்தவரும் விருந்தினர்களுக்கும் திண்டாட்டத்தைப்போக்கி கொண்டாட்டம் தொடர வழிசெய்திருக்கின்றன.