மாற்றுத்திறனாளிகளுக்கான பாலியல் சேவை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மாற்றுத்திறனாளிகளுக்கான பாலியல் சேவை: தொண்டா? தொழிலா?

மாற்றுத்திறனாளிகளின் பாலியல் தேவைக்கு உதவும் தொண்டுநிறுவனம் ஒன்று தைவானில் இயங்குகிறது.

தாமாக சுய இன்பத்தில் ஈடுபட முடியாதவர்களுக்கு இது உதவி செய்கிறது.

“ஹேன்ட் ஏஞ்செல்ஸ்” என்கிற பெயரிலான இந்த தொண்டு அமைப்பின் நிறுவனர் வின்செண்ட்.

மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான முழுமையான பாலியல் சேவை அளிப்பதாக கூறும் வின்செண்ட், "தொடுவதில் துவங்கி பாலியல் உச்சம் அடைவது வரை அனைத்தும் செய்யப்படும்" என்கிறார்.

இதுவரை ஆறுபேருக்கு இந்த உதவியை செய்திருப்பதாக இந்த அமைப்பு கூறுகிறது.

அப்படி பயனடைந்தவர்களில் ஒருவர் மிய் நு. “நான் வின்செண்டை சந்தித்தபோது இருவரும் நிறைய பேசினோம். நான் ஏராளமான கேள்விகள் கேட்டேன்”, என்றார் அவர்.

இந்த அனுபவத்துக்காக தான் ஏக்கத்தோடு காத்திருந்ததாக கூறும் அவர், இந்த சேவையை வழங்கப்போகும் தொண்டு அமைப்பாளரை தான் இதற்கு முன் சந்தித்ததில்லை என்றும் கூறினார்.

“ஆயினும் ஏராளமான கனவுகள், கற்பனைகள் என்னுள் சிறகடித்து பறந்தன”, என்கிறார் அவர்.

அதேசமயம் இத்தகைய சேவைகள் ஒருவகை பாலியல் தொழிலே என விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் தாங்கள் செய்வது தைவானில் சட்டப்படியான செயலே என்கிறது ஹேண்ட் ஏஞ்செல்ஸ் அமைப்பு.

"என்னை ஒரு பாலியல் தொழிலாளியாக மற்றவர்கள் பார்த்தால் எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை" என்கிறார் "ஹேன்ட் ஏஞ்செல்ஸ்" தொண்டு அமைப்பைச் சேர்ந்தவர்களில் ஒருவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்