வானில் வரையும் ஓவியர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வானில் வரையும் ஓவியர்

பிரேசில் ஓவியர் விக் முனிஸ் வித்தியாசமான முயற்சி ஒன்றை மேற்கொண்டிருக்கிறார்.

வானமே அவரது திரை. விமானமே தூரிகை. அசையும் மேகங்களே அவரது ஓவியங்கள்.

“ஓவியம் எப்படி உருவாகிறது என்பதை பார்க்க மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள். எனவே அதை நேரடியாக ஒளிபரப்பும் ஒன்றாக செய்துகாட்ட விரும்பினேன்”, என்கிறார் அவர்.

பார்ப்பவர்களால் என்ன என்று ஊகிக்க முடியாத ஒரு ஓவியத்தை அவர் வானத்தில் வரைகிறார்.

சின்னஞ்சிறு விமானம் வானில் மெள்ளப்பறந்தபடி வரைந்து செல்லும். பார்வையாளர்கள் அது போட்டுச்செல்லும் கோட்டை தொடர்வார்கள்.

அது என்ன ஓவியமாக உருவாகும் என்கிற ஆர்வம் பொங்க அவர்கள் பார்க்கும்போது கோடுகள் இணைந்து ஓவியம் தோன்றும்.

அது பலவகையான மேகங்களைக்கொண்ட ஓவியமாய் உருவாகும். பார்வையாளர்களின் கண்முன்பே காற்று அதை லேசாக அசைத்து இழுத்துச் செல்லும்.

வானில் மேகம் ஒன்று மிதந்து செல்லும் ஓவியக்காட்சியை நீங்கள் பார்ப்பீர்கள்.

“உண்மையில் இது மிக மிக எளிமையானதுதான்; ஆனால் வலிமையான காட்சி அனுபவத்தை தரவல்லது”, என்கிறார் அவர்.

நிறைய பேர் தன்னை அழைத்து "உங்கள் மேக ஓவியத்தைப்பார்த்தேன்" என்று பாராட்டுவதாக சொல்கிரார் அவர்.

கண்ணாடி மாளிகையில் அவரது மேக ஓவியம் பிரதிபலிப்பதை பார்த்தேன் என்று பாராட்டுவார்கள்.

இதை உருவாக்கியபோது கலை பொதுவானது; பொதுமக்களுக்கானது; பொதுச்சொத்து என்கிற புரிதலிலேயே செய்ததாக கூறுகிறார் அவர்.

பார்வையாளர்கள் கண்முன்னே உருவாகி அதேவேகத்தில் காணாமலும் போகும் கலைவடிவம் இது என்பது தான் இதன் மிகப்பெரிய ஆச்சரியம்.