ஒரு ரயில் டிக்கெட் விலை 10,000 டாலர்; ஆனாலும் இடமில்லை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஒரு ரயில் டிக்கெட் விலை 10,000 டாலர்; ஆனாலும் இடமில்லை

  • 4 மே 2017

நீங்கள் ஒரு ரயில் டிக்கெட்டுக்கு $10,000 செலவழிக்கத்தயாரா?

தயாரென்றால், நீங்கள் வெகுவிரைவில் ஜப்பானின் புதிய சொகுசு ரயிலில் பயணிக்கலாம்.

கிழக்கு ஜப்பான் ரயில் நிறுவனம் தனது புத்தம்புது ஷிகிஷிமா சொகுசு ரயில் சேவையை துவக்கியுள்ளது.

டோக்யோவிலிருந்து ஹொக்கைடோவுக்கான 4-நாள் பயணத்தின் உயர்தரக்கட்டணம் $10,000 வரை ஆகும்.

உலகின் மிகச்சிறந்த மெஷெல் நட்சத்திர சமையல்காரர்கள் இதில் சமைக்கிறார்கள்.

பியானோ இசைக்கலைஞரின் ரம்யமான இசையை ரசித்தபடி நீங்கள் சாப்பிடலாம்.

பாரில் பல்வேறுவகையான காக்டெய்ல்களை நீங்கள் குடிக்கலாம்.

ரயில்பெட்டியின் துவக்கத்திலும் முடிவிலும் கண்ணாடிப்பெட்டிகளில் பயணித்தபடி வானத்தை ரசிக்கலாம்.

பத்து பெட்டிகள் கொண்ட ரயிலில் 34 பயணிகள் மட்டுமே பயணிப்பார்கள் என்பதால் கூட்ட நெரிசலே இருக்காது.

இதன் முதல்நாள் பயணத்திற்கான டிக்கெட்டுகளை குலுக்கல்முறையில் பெற ஏகப்பட்டபேர் முயன்றனர்.

மிக அதிகமான விலையிருந்தும் மார்ச் 2018 வரை இதன் பயண டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன.