சிசேரியன் தழும்புகளை மறைக்க எளிய வழி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிசேரியன் தழும்புகளை மறைக்க எளிய வழி

  • 12 மே 2017

சீனாவின் ஷாங்காயிலுள்ள பச்சைகுத்தும் கலைஞர் ஷி ஹைலிய்.

இவர் இளம் தாய்களுக்கு உதவி வருகிறார்; குறிப்பாக சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைபெற்ற தாய்மார்களுக்கு இவர் உதவுகிறார்.

அவர்களின் சிசேரியன் அறுவை சிகிச்சைத்தழும்புகள் மீது ரோஜா, பூனை உள்ளிட்ட அழகிய ஓவியங்களை பச்சைகுத்துகிறார் இவர்.

இவரது சாமுராய் பச்சைகுத்தும் கடை மாதத்துக்கு 6 தாய்மார்களுக்கு இதை செய்து வருகிறது.

“தாய்மார்களின் முகத்தில் சிரிப்பைப் பார்க்கும்போது எதையோ சாதித்ததை போல் உணர்கிறேன்” என்கிறார் பச்சைகுத்தும் கலைஞர் ஷி ஹைலிய்.

உலகிலேயே அதிகமான சிசேரியன் அறுவை சிகிச்சைகள் நடக்கும் நாடுகளில் சீனா முன்னிலை வகிக்கிறது.

அதனால் கோடிக்கணக்கான தாய்மார்கள் தம் அடிவயிற்றில் மோசமான தழும்புகளுடன் காணப்படுகிறார்கள்.

அத்தகையவர்களின் தன்னம்பிக்கையை மீட்டெடுத்து அதிகரிக்கும் கலைவடிவத்தை இவர் உருவாக்கி உதவி செய்துவருகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்