கணவனை பகிர்ந்து வாழ்வதை விரும்புவது ஏன்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கணவனை பகிர்ந்து வாழ்வதை விரும்பும் பெண்

ஏற்கனவே மூன்று மனைவிகள் இருந்தவருக்கு நான்காவது மனைவியாக விரும்பி வாழ்க்கைப்பட்டார் ஹலீமா.

பிரிட்டனின் பிர்மிங்ஹாம்லிருந்து இதற்காகவே சொமாலியா சென்றார் அவர்.

பலதார திருமணத்தில் வாழ்வதில் இருப்பதில் சிரமங்கள் இருப்பதையும் அவர் ஒப்புக்கொள்கிறார்.

“ வெறுமனே உட்கார்ந்தபடி உங்கள் முறைவரும் வரை காத்திருப்பது தான் மிகவும் சிரமமானதாக உணர்ந்தேன்”, என்கிறார் அவர்.

முதல்நாள் இரவு இங்கே; அடுத்த இரவு இன்னொரு வீட்டில் அதற்கடுத்த இரவு அடுத்தவர் வீட்டில் தன் கணவர் இருப்பார் என்று கூறும் ஹலீமா, “நினைத்த மாத்திரத்தில் போட்டது போட்டபடி என்னைத்தேடி அவரால் ஓடி வரமுடியாது”, என்றும் கூறினார்.

ஆனாலும் தனக்கு அந்த வாழ்க்கை பிடித்திருந்தது என்கிறார் அவர். காரணம் அவருக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்ததால் தனக்கு பொறுப்பு குறைவு என்பது அவரது வாதம்.

மற்ற மனைவிகளுடனான ஹலீமாவின் உறவு சுமுகமாகவே இருந்தது. அவர் மனைவிகளில் ஒருவர் இவருக்கு மிகவும் நெருக்கமான சிநேகிதியானார். தன் குழந்தைகளை இவர் பராமரிப்பில் விடும் அளவுக்கு அவர் ஹலீமாவுக்கு நெருக்கம்.

“நான் மீண்டும் திருமணம் செய்வதாக இருந்தால் இதையே இன்னொருமுறையும் செய்வேன். பலதாரமண உறவுக்குள்ளான மனைவியாகவே மீண்டும் நான் திருமணம் புரிந்துகொள்ள விரும்புவேன்”, என்கிறார் அவர்.

இது தன்னுடைய தனிப்பட்ட விருப்பம் என்றும் வேறுவகையான திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்றும் கூறுகிறார் ஹலீமா.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்