தொடங்கியது 'காலா' படப்பிடிப்பு; மும்பையில் ரஜினிகாந்த்

நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்து பா. ரஞ்சித் இயக்கி ரஜினிகாந்த் நடிக்கும் 'காலா' திரைப்படத்தின் முதற்கட்ட படபிடிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை மும்பையில் தொடங்கியது.

தொடர்ந்து 40 நாட்களுக்கு மும்பையில் படபிடிப்புகள் நடைபெறும் என திரைப்பட குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காலா திரைப்படத்தில் நடிக்கும் கலைஞர்களின் முழு பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

காலா படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஹீமா குரோஷி நடிக்கிறார்.

ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, சுகன்யா உள்பட பல கலைஞர்கள் துணை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ரஜினிகாந்துக்கு 'காலா' 164-ஆவது திரைப்படமாகும்.

இதற்கு முன்பு வெளியான கபாலி திரைப்படத்தை இயக்கியவர் ரஞ்சித் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

பிற செய்திகள் :

பின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்களின் திகில் நினைவுகள்!

புதைத்தல், எரித்தல் போய் இப்போது பசுமை தகனம் !

பெண்களை பாலியல் அடிமைகளாக்கி தீவிரவாத குழுவை விரிவாக்க முயலும் அல்-ஷபாப்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்