கிரேக்கத்தில் ஒரு தீமிதி திருவிழா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிரேக்கத்தில் ஒரு தீமிதி திருவிழா

  • 29 மே 2017

எச்சரிக்கை: எக்காரணம் கொண்டும் இந்த காணொளியில் இருப்பதை வீட்டிலோ வெளியிலோ செய்ய முயலாதீர்கள்.

கிரேக்க கிராமமான லகடாஸில் இருப்பவர்கள் எரியும் நிலக்கரி தணலின் மேல் நடனமாடுகிறார்கள்.

அனஸ்டனாரியா விழாவின் ஒரு பகுதியாக இந்த தீமிதி நடனம் நடக்கிறது.

செயிண்ட் காண்டஸ்டைன் மற்றும் செயிண்ட் ஹெலெனின் திருஉருவங்களை ஏந்தியபடி இவர்கள் இப்படி நடனமாடுகிறார்கள்.

எரியும் நிலக்கரி மீது நடப்பதற்கு முன் இவர்கள் தம்மை மறந்த நிலைக்கு சென்றுவிடுகிறார்கள்.

15 வயது முதல் ஜியோர்கோஸ் மெலிகிஸ் இப்படி நடனமாடி வருகிறார்.“நாங்கள் அனஸ்டனாரிகள். வழிபாடு, பாட்டு, நடனம் மூன்றுமே எங்களின் வாழ்முறை”, என்கிறார் அவர்.

50 ஆண்டுகளாக அனஸ்டனாரியாக இருப்பதாக கூறும் அவர், இதுவரை தன் கால்களில் தீக்காயம் ஏற்பட்டதில்லை என்றும் அதற்கான காரணம் என்ன என்று தனக்குத் தெரியாது என்றும் தெரிவித்தார்.

“எரியும் நிலக்கரி மீது நடக்கிறேன். நடனமாடுகிறேன். ஆனால் எப்போதும் எனக்கு தீக்காயம் ஏற்பட்டதில்லை. இதற்கு எங்களிடமுள்ள ஒரே விளக்கம், இது எங்களின் ஆழ்ந்த நம்பிக்கை. அவ்வளவுதான்”, என்கிறார் ஜியோர்கோஸ் மெலிகிஸ்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்