பெல்லி டான்ஸும் பரதம் போன்றதே: ஆண் பெல்லி டான்ஸரின் கதை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பெற்றோர் ஒதுக்கிய இந்திய பெல்லி டான்ஸர்

  • 30 மே 2017

இந்தியாவின் ஆண் பெல்லி டான்ஸரான இஷான் இலால் உடை வடிவமைப்பாளரும் கூட.

“மகிழ்ச்சியோ சோகமோ நடனமாடவே விரும்புவேன்”, என்கிறார் அவர்.

நடனம், உடைவடிவமைப்பு மூலமே தன்னை வெளிப்படுத்துவதாக கூறுகிறார்.

நடனம் என்பது உணர்வுநிலை என்பவர் உடையலங்காரம் என்பது தனக்கு உணவு போன்றது என்கிறார்.

நடனத்தின் மீதான நாட்டம் சிறுவயது முதலே இருந்ததாக கூறும் இஷான், பலமுறை டியூஷனுக்கு செல்லாமல் கதக் நடனம் பயில சென்றதாக தெரிவித்தார்.

இந்திய மரபுநடனங்களைப்போலவே பெல்லி டேன்ஸும் மிகவும் அழகானது என்கிறார் அவர்.

அதேசமயம் தான் நடனமாடுவதை தன் குடும்பம் விரும்பவில்லை என்றும் நடனம் தடுக்கப்பட்ட செயல் என்றும் பெண்களுக்கானது என்றும் ஆண்களுக்கானதல்ல என்றும் குடும்பத்தவர் கூறியதாக தெரிவித்தார்.

நடனமாடினால் நீ ஆணே அல்ல என்று அவமதித்ததாகவும் தன் பெற்றோர் தன்னை அவமானமாக கருதுவதால் தன்னிடம் பேசுவதில்லை என்றும் கூறினார்.

அதேசமயம் தன் பெற்றோரை தான் நேசிப்பதாகவும் மதிப்பதாகவும் அவர்கள் தரப்பை புரிந்துகொள்வதாகவும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

தன் குடும்பத்தவர் சமூகத்தை கண்டு அஞ்சுவதாகவும் மதக்கட்டளைகளுக்கு பயப்படுவதாகவும் கூறும் இஷான், “நான் பழமையைவிரும்பும் முஸ்லிம் குடும்பத்திலிருந்து வந்தவன்”, என்கிறார்.

அதே சமயம் நம்மை மற்றவர்கள் ஏற்கவேண்டுமென விரும்பினால் முதலில் நம்மை நாம் ஏற்றுக்கொள்ள பழகவேண்டும் என்கிறார்.

“என் முன் இரு தேர்வுகள் இருந்தன. பொய் தோற்றத்தோடு போலி வாழ்க்கை வாழ்வது அல்லது எனக்கு பிடித்ததை செய்தபடி நான் நானாகவே நிம்மதியாக வாழ்வது. இதில் நாம் வாழப்போவது ஒரே ஒரு முறை மட்டுமே என்பதால் நான் நானாகவே வாழ முடிவெடுத்தேன் என்கிறார் இஷான்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்