நீண்ட இடைவெளிக்கு பிறகு இணையும் 'நாட்டாமை' மற்றும் 'சீவலப்பேரி பாண்டி'

கல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பில் சரத்குமார் கதாநாயகனாக நடிக்கும் படம் 'சென்னையில் ஒரு நாள் -2'. சரத்குமார் நடித்த வெற்றிப்படமான 'சென்னையில் ஒரு நாள்' படத்தைப் போன்று பரபரப்பான த்ரில்லர் படம் என்பதால் படக்குழுவினர் இப்படத்திற்கு 'சென்னையில் ஒரு நாள் -2' என்று பெயரிட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை சென்னையில் ஒரு நாள் -2

பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களின் கிரைம் நாவல்களின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில், சரத்குமார் ரகசிய உளவாளியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்ற மாதம் கோவையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நடிகர் நெப்போலியனும் மற்றும் நடிகை சுஹாசினியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

கலக்கலான காமெடியுடன் மாபெரும் வெற்றி பெற்ற தென்காசிபட்டினம் படத்திற்கு பிறகு நடிகர் நெப்போலியன் இப்படத்தின் மூலம் மீண்டும் சரத்குமாருடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் மூத்த நடிகர்களான சரத்குமாரும், நடிகை சுஹாசினியும் முதன்முறையாக இப்படத்தில்தான் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை சென்னையில் ஒரு நாள் -2
Image caption மீண்டும் சரத்குமாருடன் இணைந்து நடிக்கும் நெப்போலியன்

படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ராம் மோகன் தயாரிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குனர் ஜெபிஆர் இயக்குகிறார்.

முன்னதாக, சரத்குமார் மற்றும் நெப்போலியன் ஆகிய இருவரும் நடிகர் சங்கக்திலும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இணைந்து பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாம்:

தொடங்கியது 'காலா' படப்பிடிப்பு; மும்பையில் ரஜினிகாந்த்

சினிமா விமர்சனம்: பிருந்தாவனம்

மாட்டிறைச்சித் தடை: `திராவிட நாடு` கோரும் மலையாளிகள் !

சென்னை ஐஐடியில் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் மீதும் புகார்

மாட்டிறைச்சிக்கு தடை போட மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்