''ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் தமிழ் திரைப்படத்துறை சின்னாபின்னமாகும்'' : கமல் ஹாசன்

  • 2 ஜூன் 2017
படத்தின் காப்புரிமை facebook

பொழுதுபோக்குத் துறையான திரைப்படத்துறைக்கு மத்திய அரசு 28 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிக்க முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு நடிகர் கமல் ஹாசன் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் இது குறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், நடிகர் கமல் ஹாசன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் எல்.சுரேஷ் உள்பட தமிழ் திரைப்படத் துறையின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய கமல் ஹாசன், பிராந்திய சினிமாவிற்கு இருக்கும் பலம் அந்த பிராந்தியத்தில்தான் இருக்கிறது என்றும், இந்தி சினிமாவோடு தமிழை ஒப்பிட்டு அதற்கு நிகரான வரியை விதிக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

இது இந்தி எதிர்ப்பல்ல என்று கூறிய கமல் தமிழ் படங்களையும், இந்தி படங்களையும் ஒரே எடையில் வைக்கக்கூடாது என்றார்.

''பிராந்திய மொழி திரைப்படங்கள்தான் இந்திய திரைப்படங்களின் முதுகெலும்பு அதன் பன்முகத்தன்மை காக்கப்பட வேண்டும் என்றும், இந்தியா போன்ற நாட்டிற்குள் ஒற்றை கலாச்சார முறையை கொண்டுவர கூடாது என்றும் திட்டவட்டமாக கூறினார்.

இறுதியாக, இதுபோன்ற வரிவிதிப்பு தமிழ் சினிமா மீது மிகப்பெரிய சுமையாக இருக்கும் என்று கூறிய கமல் ஹாசன் ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் தமிழ் சினிமா சின்னாபின்னமாகும் சூழல் உருவாகும் என்றார்.

28 % பதிலாக 12 % ஜி.எஸ்.டி வரி விதிக்க வேண்டும் என்று தமிழ் திரைப்படத்துறை சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக கமல் ஹாசன் தெரிவித்தார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்