மூளையில் காயம்பட்டும் தூரிகை ஏந்தும் அதிசய மனிதர்கள்

படத்தின் காப்புரிமை Leon Foggitt / Billy Mann

மூளையில் காயம் ஏற்பட்டு உயிர் பிழைத்தவர்கள் கடந்த மே மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தங்களுடைய அசாதாரண கலைப்படைப்புகளை வெளிப்படுத்தி உள்ளனர்.

தீவிர மூளை காயம் ஏற்பட்டு உயிர் பிழைத்தவர்களின் குணநலன்கள், உறவுகள் மற்றும் சுதந்திரம் போன்றவற்றை பாதிக்கும் நீண்டகால பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

''மூளையில் காயம் ஏற்பட்டு உயிர் பிழைத்தவர்கள் பெரும்பாலும் ஆழமான இழப்பை அனுபவிப்பார்கள். இதனோடு, அடையாளத்தில் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்கொள்வார்கள். சிலருக்கு தங்களுடைய உணர்வுகளையும், யோசனைகளையும் வெளிப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும்.'' என்கிறார் ஹெட்வே ஈஸ்ட் லண்டன் என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பென் கிரஹாம்.

'' ஓவியம் தீட்டுதல் மற்றும் வரைதல் ஆகியவை, உள்ளார்ந்த நம்பத்தகுந்த நடவடிக்கைகள். ஏனென்றால் அவை இதற்குமுன் இல்லாத விஷயங்களை தங்களுடைய உலகிற்குள் கொண்டுவருகின்றனர். ஒரு நபரால் புதிய விஷயம் ஒன்றை செய்ய முடியும் என்றால், இது தங்கள் மீது இழந்த கட்டுப்பாட்டை, நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.'' என்கிறார் பென்.

மூளையில் ஏற்படும் காயங்களுக்கான தொண்டு நிறுவனம்தான் ஹெட்வே ஈஸ்ட் லண்டன், அது ஹாக்னியில் உள்ள லண்டன் பரோவில் 'சப்மிட் ஆஃப் லவ்' என்ற கண்காட்சியை நடத்தியது. அதில், மூளையில் காயம் ஏற்பட்டு உயிர் பிழைத்தவர்கள் வரைந்த ஓவியங்கள் ஓர் அங்கமாக காட்சிக்கு வைக்கப்பட்டன.

இரு ஓவியர்கள் அவர்களுடைய கதையை எங்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

சாம் ஜுவோன் : வயது 49

இரு குழந்தைகளை தனியோருவராக கவனிக்கும் தாய் சாம் ஜுவோன். 2006ல் நிகழ்ந்த கார் விபத்து ஒன்றில் முக முடக்கு வாத நோயினால் பாதிக்கப்பட்டார். விபத்து நடைபெறுவதற்குமுன், அவர் ஓர் ஓவியர் அல்ல, ஆனால் தற்போது அவருடைய படைப்புகள் பல கண்காட்சிகளில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

படத்தின் காப்புரிமை Leon Foggitt / Billy Mann
Image caption சாம் ஜுவோன்

''மூளையில் காயம் ஏற்பட்டவுடன் தான் நான் ஓவியர் என்பதையே உணர்ந்தேன். தற்போது, நான்கு வருடங்களாக ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறேன். மிக நீண்ட தூரத்தை கடந்து வந்துள்ளேன். நான் சாதித்துள்ள விஷயத்தை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.

''ஓவியம் என்பது நம்மை வெறும் ஆசுவாசப்படுத்தும் ஒன்றுமட்டுமல்ல. அது எனக்கு நிறைய பொறுமை மற்றும் தன்னம்பிக்கையை கற்றுக் கொடுத்துள்ளது. எனக்கு என்ன நடந்தது, என்னுடைய கதையை பிறருக்கு சொல்வதற்கு ஓவியம்தான் சிறந்த கருவியாக இருந்தது.''

''நான் என்னை ஓர் மாற்றுத்திறனாளி என்று ஒருநாளும் சொல்லிக்கொள்ள மாட்டேன். நான் நடக்கும் பாணியை பொருத்து அல்லது நான் தோன்றும் விதத்தை பொருத்து என்னை நான் வர்ணித்து கொள்வேன். நான் சற்று கால் தாங்கித்தான் நடப்பேன். என்னுடைய குரல் வேறுமாதிரி உள்ளது. என்னுடைய கண்களில் ஒன்று பெரியதாகவும், மற்றொன்று சிறியதாகவும் உள்ளது. ஆனால், இவை அனைத்தும் என்னிடம் உள்ள வெறும் மாற்றங்களே.

''முன்பை காட்டிலும் நிறைய விஷயங்களை சுயமாக செய்து கொள்ள ஆரம்பித்துள்ளேன். ஓவ்வொரு ஆண்டும் பெரியளவில் முன்னேறி வருகிறேன்.''

செஸில் வால்ட்ரன், 78

லண்டனில் வாழ்கிறார் செஸில். 2000ல் நடைபெற்ற சாலை விபத்து ஒன்றில் செஸிலின் இடது கண் பார்வை பாதிக்கப்பட்டது. மேலும், பார்வை சமநிலை பிரச்சனை மற்றும் நினைவக சிக்கல்களாலும் செஸில் வால்ட்ரன் பாதிக்கப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Leon Foggitt / Billy Mann
Image caption செஸில் வால்ட்ரன்

''17 ஆண்டுகளுக்கு முன்னர் நான் விபத்துக்குள்ளானேன் என்பது எனக்கு தெரியும். ஆனால், அதை என்னால் நினைவுபடுத்த முடியவில்லை. அது உடம்பில் ஏற்பட்டதா அல்லது மூளையில் ஏற்பட்டதா என்பதை நான் எண்ணிப்பார்க்க விரும்பவில்லை. அது எனக்குத் தெரியாது.

'' கலை மற்றும் என்னுடைய ஆசிரியரால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அது என்னிடமிருந்தது என்பதை நான் நினைத்து பார்க்கவில்லை.

''இதுபோன்ற தொண்ப்டு பணிகளில் ஈடுபட எனக்கு ஊக்கம் இருந்தது என்பதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என்னுடைய மகிழ்ச்சிக்காக ஒவ்வொரு வாரமும் ஸ்டூடியோவிற்கு சென்று பிற மனிதர்களை சந்திக்கின்றேன்.

''முன்பு இருந்த செஸில் இப்போது நிறைய மாறியிருக்கிறார். ஒரு கதவு அடைக்கப்பட்டால் மற்றொன்று திறப்பதை போன்று இதைப் பார்க்கிறேன்.'' என்கிறார் செஸில்.

பிற செய்திகள் :

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
போர்வைகளாகும் பழைய துணிகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்