'மெர்சல்': 'நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்கக் காத்திருக்கும்'- வைரலாகும் முன்னோட்டம்

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் புதிய படம் மெர்சல். அட்லீயின் பிறந்தநாளான இன்று மாலை இத்திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது.

படத்தின் காப்புரிமை YouTube

தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் முதலில் இதை வெளியிட்டது. யூ டியூபில் வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது 'மெர்சல்'.

'இளைய தளபதி' என்ற அடைமொழிக்கு பதிலாக 'தளபதி' விஜய் எனும் அடைமொழியுடன் இந்த முன்னோட்டம் துவங்குகிறது.

"நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி எரிய உன்னைக் கேட்கும். நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்" என்ற வசனத்தை முன்னோட்டத்தின் தொடக்கத்திலேயே விஜய் பேசுவதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.

தமிழக அரசியலில் அனல் பறக்கும் சூழ்நிலையில் 'ஆளப்போறான் தமிழன்' எனத் தொடங்கும் பாடலும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது.

மாயஜாலம் செய்யும் வித்தைக்காரனாக ஒரு தோற்றத்திலும் நெற்றியில் திருநீறு பட்டை மற்றும் மீசை தாடியுடன் இன்னொரு தோற்றத்திலும் முன்னோட்டத்தில் வருகிறார் விஜய்.

மெர்சல் திரைப்பட முன்னோட்டம் குறித்து பல பிரபலங்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதையடுத்து டிவிட்டர் தளத்தில் இந்திய அளவில் வைரலாகி இருக்கிறது 'மெர்சல்'.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்