முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளின் அழகைக் கொண்டாடும் மனிதர்கள்

கரும்புள்ளிகள் படத்தின் காப்புரிமை BROCK ELBANK

சூரிய ஒளியின் யூ-வீ கதிர்களால், முகத்தில் உருவாகும் கரும்புள்ளிகளின் குவியல்களான 'ஃபிரிக்கல்கள்' எனக்கு உள்ளது குறித்து நான் எப்போதுமே கூடுதல் கவனமாக இருப்பேன்.

நான் எட்டு வயதாக இருக்கும் போது, கோடைகாலத்தில் மிகவும் சூடான ஒரு நாளில், என் பாட்டி வீட்டு தோட்டத்தில் உட்கார்ந்திருந்தது நினைவில் உள்ளது.

அவ்வளவு வியர்வையும், வெப்பமும் இருந்தபோதும், எனது கோட்டை கழற்ற நான் மறுத்தேன். காரணம்? எனது இடது தோள்பட்டையில், வட்டமாக இருந்த புள்ளிகளை நான் வெறுத்தேன்.

என்னோடே தங்கிவிட்ட மற்றொரு நினைவு: எனக்கு 14 வயதாக இருந்தபோது, கணக்கு வகுப்பில், எனக்கு பின்னால் உட்கார்ந்திருந்த பெண், "சீ, அவளின் காது மடல்களில் உள்ள புள்ளிகளை பாருங்கள், அது மிகவும் வித்தியாசமாக உள்ளது" என்றாள். உடனடியாக நான் என் தலைகளை ஆட்டி, முடியை காதுகள் மறைக்கும் வகையில் கொண்டு வருவதற்குள், முன்புறமாக குனிந்தேன்.

அலங்காரங்கள் செய்துகொள்ளும் வயதை அடைந்த பிறகு, மிகவும் திடமான, முகத்தில் உள்ள அனைத்தையும் மறைக்கக்கூடிய அலங்கார பொருட்களை கண்டுபிடிப்பதே எனக்கு இலக்காக இருந்தது.

படத்தின் காப்புரிமை BROCK ELBANK

என் முகத்தில் உள்ள புள்ளிகளை மறைப்பதற்காக பல அடுக்கு அலங்காரங்களை, பல ஆண்டுகளாக, நான் பூசியுள்ளேன்.

ஆண் தோழர்கள் என்பது மிகப்பெரிய பிரச்சனை. என்னுடைய அலங்காரத்தைக் கலைத்து அவர்களுடன் நான் எவ்வாறு சுமூகமாக பழகுவேன்? என்னுடைய கண்களுக்கு நான் பூசிக்கொண்ட மேற்பூச்சை மட்டும் அழித்துவிட்டு, என் முகத்தின் நிறமே இதுதான் என அவர்கள் ஏமாந்து போவார்கள் என்று நான் நம்பியுள்ளேன்.

புகைப்படக்காரர் புரூக் எல்பாங்க், இந்த புள்ளிகளை முழுவதும் வேறுமாதிரி பார்க்கிறார். `சிம்பிளி ஃபிரிக்கல்ஸ்` என்ற தனது திட்டத்தின் ஒரு பகுதியாக, இத்தகைய புள்ளிகள் உள்ளவர்களை புகைப்படத்திற்கு போஸ் அளிக்குமாறும், தங்கள் முகத்திலும் உடலிலும் உள்ள புள்ளிகளை கொண்டாடுமாறும் அவர் கேட்கிறார்.

பேஷன் புகைப்படங்கள் எடுக்கக்கூடிய புரூக், ஆஸ்திரேலியாவில் வாழும்போது, 2012 இல் இந்த திட்டத்தை தொடங்கினார்.

படத்தின் காப்புரிமை BROCK ELBANK

தனது நண்பரின் மகனின் உடலில் இருந்த இத்தகைய புள்ளிகளை பார்த்து ஆர்வம் கொண்டு அவர் இந்த திட்டத்தை தொடங்கினார்.

இந்த திட்டம் குறித்த செய்தி வெளிவரத் தொடங்கியதும், ஆயிரக்கணக்கானோர், புகைப்படம் எடுத்துக்கொள்ள குவிந்தனர். "நான் இதுவரையில் 177 பேரை புகைப்படம் எடுத்துள்ளேன். இதற்காக ஆறு ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்தன. பலரும், தாங்கள் பார்ப்பதற்கு இவ்வாறு உள்ளோம் என்பதை வெறுப்பதாக கூறினர்" என்றார் புரூக்.

அந்த உணர்வுகளோடு என்னால், என்னை இணைத்துக்கொள்ள முடிகிறது. கடந்த ஆண்டுதான், மேக் அப் இல்லாமல் வாழும் துணிவு எனக்கு வந்தது. புளோரிடாவில் விடுமுறையின் முதல்நாளில், அதிக வெயிலை பொருட்படுத்தாமல், நான் முகத்தின் மிகவும் திடமான மேக்-அப் போட்டேன்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
முதல் உலகப் போர்: பிரிட்டிஷாருக்காக இறந்த இந்திய சிப்பாய்கள்

நான் வெளியே சென்றதுமே வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தேன், ஒரு மணி நேரத்திற்குள் என் முகத்தில் இருந்த மேக்-அப் வழிவது போல உணர்ந்தேன். என்னால் தாங்கமுடியவில்லை. மிகவும் பிசுபிசுப்பாக உணர்ந்தேன்.

இன்னொரு நாள், மெலிதான கஞ்சி போல எனது முகத்தில் உள்ள மேக்-அப், வழிந்து வந்த பிறகு தான், நான் மேக்-அப் போடுவதை தவிர்க்க வேண்டும் என்ற முடிவிற்கே வந்தேன்.

எல்லோருமே ஆடைகள் இல்லாமல் அலுவலக பணிக்கு வருவது போன்ற கனவு ஒன்று இருக்கல்லவா? விடுதியின் அறையில் இருந்து மேக்-அப் இல்லாமல் வெளியே வந்த போது, எனக்கு அப்படி ஒரு வலிமையற்ற உணர்வுதான் தான் இருந்தது.

படத்தின் காப்புரிமை BROCK ELBANK

ஆனால், கடவுளே! அது ஒரு விடுதலையின் உணர்வு. முகத்தில் வியர்வை வழிவது, எவ்வாறு சூரிய கதிர்களை தவிர்க்கும் கிரீம்களை முகத்தில் மேக்-அபிற்கு மேல் போடுவது ஆகிய எந்த கவலைகளும் இல்லாமல் இருந்தது. கவலைகள் குறைவாகவும் வாழ்வது அதிகமாகவும் இருந்தது.

அந்த வாரத்தின் இறுதிக்குள் என் முகத்தில் இருந்த புள்ளிகள் பெருகிவிட்டன. இந்த விளையாட்டிற்காக சூரியனே அவற்றை வெளியே கொண்டு வந்தது போல அது இருந்தது.

பத்து ஆண்டுகளாக, மேக்-அப் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வராத எனது சொந்த ஊரிலும், நான் இந்த புதிய முறையிலேயே, புள்ளிகள் தெரியும் வகையிலேயே வெளியே வர முடிவு செய்தேன்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மருந்தாகும் பீர் : சிங்கப்பூர் கண்டுபிடிப்பு

நான் பணிக்கு சென்று, காத்திருந்தேன். எனது சக ஊழியர்கள் பணிக்கு வந்து இந்த திகிலை பார்த்து கத்துவார்கள், எனக்கு பின்னால் பேசுவார்கள் என்று. ஆனால், அப்படி ஒன்றும் நடக்கவில்லை. என்னால் அதை நம்ப முடியவில்லை.

அன்று வீட்டிற்கு சென்ற நான் குழம்பிவிட்டேன். என்னுடைய உண்மையான முகத்தை வெளியே காண்பிக்க நான் ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டேன் என எண்ணி வியந்தேன்.

புரூக்கின் திட்டத்தை பல காலங்களுக்கு முன்பு நான் பார்த்திருக்க கூடாதா என விரும்பினேன்.

படத்தின் காப்புரிமை BROCK ELBANK

"இந்த புள்ளிகள் எனக்கு எப்போதுமே பிடித்தன, நான் அவற்றை மிகவும் ஆச்சிரியமானவையாகவே பார்த்தேன். நான் புகைப்படம் எடுத்தவர்களில், மிகவும் சிறியவர் என்றால், மூன்று வயது குழந்தை; வயது அதிகமானவர் என்றால், 73 வயதுடைய ஒருவர் தான்."

அவர்களில் பெரும்பாலானோர், தங்களுக்கு இத்தகைய புள்ளிகள் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்வது எவ்வளவு பெரிய சவால் என அவரிடம் தெரிவித்தனர்.

எனக்கு வயதாக வயதாக, நான் யார் என்பதை ஏற்றுக்கொள்ளவும், நெசிக்கவும் அதிக விரும்புகிறேன். தங்களிடம் உள்ள வித்தியாசங்களை மக்கள் ஏற்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அது தான் அவர்களை சிறப்பானவர்களாக்குகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்