போக்குவரத்து: பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்கள் #BBCTamilPhotoContest

பிபிசி தமிழின் மூன்றாம் வார புகைப்பட போட்டிக்கு 'போக்குவரத்து' என்ற தலைப்பில் புகைப்படங்களை அனுப்பி வைக்குமாறு பிபிசி தமிழ் நேயர்களிடம் கேட்டிருந்தோம்.

பல்வேறு உலக நாடுகளிலிருந்து பிபிசி தமிழ் நேயர்கள் நூற்றுக்கணக்கான புகைப்படங்களை எங்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர். அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வத்துடன் பங்கு கொண்ட நேயர்கள் அனைவருக்கும் நன்றி.

Image caption ஆஸ்திரேலியாவின் லிஸ்மோரில் சீறிப்பாயும் விமானம் - பரமநாதன் வினோதன்
Image caption இதன் சுகமே தனிதான்! - அல்வசீம் ரிபா
Image caption சக்கரக் கால்கள்! - சிவகஜன் ஆருடச்செல்வம்
Image caption கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பென்சில்வேனியாவில் அலங்கரிக்கப்பட்டுள்ள ஒரு கிராமம் - பார்கவ் கேசவன், ஒசூர்
Image caption எஸ் ஜே எஸ் போட்டோ பிரியன், திரிகோணமலை
Image caption கனடாவில் உள்ள அமைதியான மொரெயின் ஏரியில் பயணத்துக்கு காத்திருக்கும் ஓடங்கள் - எஸ். மனோஹரன்
Image caption பட்டிப்பொலவில் அமைந்துள்ள ரயில் நிலையம்: எம்.ஆர்.எம் ருஷ்டி, இலங்கை
Image caption துபாயில் அமைந்துள்ள புர்ஜ் கலிஃபாவிலிருந்து கழுகுப் பார்வை- மஹேஷ் கிருஷ்ணன் கு.பா.நா
Image caption இடுக்கி கல்வாரி மலையை நோக்கி பயணம் - ஜோஷ்வா ஜேகப் ஜாக்சன்
Image caption டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் - ராஜேஷ் மதுசூதனன்
Image caption இலங்கை பூநகரி சங்குபிடி பாலத்தில் பீட்டில் கார் - ராபின்சன்
Image caption திரிசூலத்திலிருந்து சென்னை விமான நிலையம் - வினோத் காம்ப்ளி, சென்னை
Image caption வருங்கால சுகத்துக்காக இடைக்கால இடையூறு - எம்.ஆர் ராகுல், நாகர்கோயில்
Image caption செயலிகளின் வருகையால் ஓய்ந்துபோன ஆட்டோ தொழில் - வசந்தன் வாசுதேவன், சென்னை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :