கோல்டன் குளோப் விருது அரங்கத்தை ஆக்கிரமித்த கருப்பு நிறம் - காரணம் என்ன?

  • 8 ஜனவரி 2018

75-ஆவது கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஒரு குறிப்பிட்ட நிறம் மிகவும் அதிகமாக ஆதிக்கம் செலுத்தியது.

படத்தின் காப்புரிமை Getty Images

பாலியல் தாக்குதல் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்களோடு ஒற்றுமையாக நிற்கும் டைம்ஸ் அப் இயக்கத்திற்கு ஆதரவாக நடிகைகள் கருப்பு நிற கவுன் அணிந்து வந்திருந்தனர்.

பல ஆண்களும் கருப்புச் சட்டையுடன் டைம்ஸ்-அப் பேட்ஜ் அணிந்திருந்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பெனிலோப் க்ரஸ், மரியா கரே, க்லைர் ஃபாய்

லவ்விங் பேப்லோ திரைப்படத்தின் நடிகை பெனிலோப் க்ரஸ், பாடகர் மரியா கரே, பிரிட்டிஷ் நடிகை க்லைர் ஃபாய் ஆகியோர் கருப்பு உடை அணிந்து வந்தவர்களில் சிலராவர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மார்கோட் ராபி, மாண்டி மூர்,கெல்லி கிளார்க்சன்

பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் கருப்பு நிறமுள்ள வெவ்வேறு விதமான ஆடைகளையும் சிலர் அணிந்து வந்திருந்தனர். சூசைட் ஸ்குவாட் படத்தின் மார்கோட் ராபி, நடிகை மாண்டி மூர் மற்றும் பாடகி கெல்லி கிளார்க்சன் ஆகியோர் அதில் சிலர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், இவான் மெக்கிரீகர், கிட் ஹேரிங்டன்

தோர் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் மற்றும் இவான் மெக்கிரீகர் ஆகியோர் உடைகளில் டைம்ஸ் அப் என்ற வார்த்தை சட்டைப்பையில் காணப்பட்டது. அதே வேளையில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகர் கிட் ஹேரிங்டன் கருப்பு உடை அணிந்து கலந்து கொண்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மில்லி பாபி ப்ரவுன், நிக்கோலே கிட்மேன், ஜெஸ்ஸிகா பீயல்

ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் நடிகை மில்லி பாபி ப்ரவுன், நிக்கோலே கிட்மேன் மற்றும் ஜெஸ்ஸிகா பீயல் சிவப்பு கம்பளத்தில் வெவ்வேறு விதமான கருப்பு உடைகளை அணிந்து வந்திருந்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஏஞ்சலினா ஜோலி, ஜெஸ்ஸிகா சஸ்டெயின் , கெண்டல் ஜென்னர்

கருப்பு நிற உடைந்து அணிந்து வந்திருந்த ஏஞ்சலினா ஜோலி மற்றும் ஜெஸ்ஸிகா சஸ்டெயின் ஆகியோரைப் போல மாடல் கென்டல் ஜென்னரும் வந்திருந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அமெரிக்கா ஃபெராரா, நடாலி போர்ட்மேன்,எம்மா ஸ்டோன், பில்லி ஜீன் கிங்

அமெரிக்கா ஃபெராரா மற்றும் நடாலி போர்ட்மேன் சிவப்புக் கம்பளத்தில் கருப்பு நிற உடைந்த அணிந்து நடந்து வந்தனர். லாலா லேண்ட் நட்சத்திரம் எம்மா ஸ்டோன் மற்றும் முன்னாள் டென்னிஸ் சாம்பியன் பில்லி ஜீன் கிங்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரீஸ் விதர்ஸ்பூன், எவா லொங்கோரியா, சல்மா ஹய்க் மற்றும் ஆஷ்லே ஜட் போஸ்

நடிகை ரீஸ் விதர்ஸ்பூன், எவா லொங்கோரியா, சல்மா ஹய்க் மற்றும் ஆஷ்லே ஜட் போஸ் ஆகியோர் தங்களது ஆதரவை தெரிவிக்கும் வண்ணம் நால்வரும் இணைந்து வந்தனர்.

கருப்பு வண்ண உடை அணியாதவர்கள் யார்?

படத்தின் காப்புரிமை Getty Images

ஹாலிவுட் அயலக பத்திரிகையாளர் அமைப்பு தலைவர் மெஹர் டட்னா சிவப்பு நிற உடை அணிந்திருந்தார். ''தனது தாயுடன் இணைந்து தேர்வு செய்த உடையை அவர் அணிந்திருந்தார்'' என தி விராப் தெரிவித்துள்ளது.

''இந்திய கலாசாரத்தின் பகுதியாக, கொண்டாட்ட நிகழ்வுகளில் விழாக்காலங்களில் அணியக்கூடிய வண்ண உடைகளை அணிவது வழக்கம்'' என அவர் தெரிவித்திருந்தார் .

டைம்ஸ் அப் இயக்கத்துக்கான ஆதரவை தெரிவிப்பதற்காக அவர் தனது பேட்ஜ் அணிந்திருந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பர்பரா மீயர், பியங்கா ப்ளாங்கோ

ஜெர்மன் மாடல் பர்பரா மீயர் பெய்ஜ் ஃப்ளோரல் என அழைக்கப்படும் ஒரு வித பழுப்பு நிற கவுன் அணிந்திருந்தார். நடிகை பியங்கா ப்ளாங்கோ சிகப்பு நிற உடை அணிந்து வந்திருந்தார்.

பலரும் கோல்டன் குளோப் விருது வழங்கப்படும் களத்தை கருப்பு மயமாக்கியிருந்த நிலையில் மீயர் தனது உடை தேர்வு குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு கருத்து தெரிவித்திருந்தார். ''சற்று கவர்ச்சியாக இருக்கக்கூடிய உடைகளை பெண்கள் அணிய இயல வேண்டும் என்றும் ''ஆண்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ளமுடியாது'' என்பது அவர்களின் தவறல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை பிளாங்கோ சிவப்பு வண்ணம் அணிந்து வந்த தனது முடிவு குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்