2018ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுகளை அள்ளிய புருனோ மார்ஸ்

படத்தின் காப்புரிமை Getty Images

60-வது கிராமி விருதுகள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அறிவிக்கப்பட்டன. அதில் அமெரிக்கா பாடகரும், பாடலாசிரியருமான புருனோ மார்ஸ் மற்றும் மற்றுமொரு அமெரிக்க ராப் பாடகரும், பாடலாசிரியருமான கென்ரிக் லாமர் ஆகிய இருவர் மட்டும் இந்தாண்டுக்கான பெரும்பாலான கிராமி விருதுகளை தட்டிச் சென்றனர்.

லாமரின் ராப் இசை தொகுப்பான "டூர் டி போர்ஸ்" இந்தாண்டுக்கான சிறந்த இசை தொகுப்புக்கான விருதை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்ஸ் அந்த விருதை பெற்றது பலருக்கும் அதிர்ச்சியளித்தது.

பல வகையான இசைகளை குறிக்கும் ஆர்&பி பிரிவை மார்ஸும், ராப் பிரிவை லாமரும் ஆக்கிரமித்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

86 விருதுகளில் 17ஐ மட்டுமே வென்ற பெண்கள்

சிறந்த புதிய கலைஞருக்கான விருதை வென்ற அலஸ்சியா கரா மட்டும்தான் இந்தாண்டில் முக்கிய கிராமி விருதொன்றை வென்ற ஒரே பெண்ணாவார்.

இந்தாண்டு வழங்கப்பட்ட 86 கிராமி விருதுகளில் வெறும் 17ஐ மட்டுமே பெண்களோ அல்லது பெண்களால் முன்னிறுத்தப்பட்டு செயல்படும் குழுக்களோ பெற்றன.

பாலியல் வன்முறை மற்றும் சமத்துவமின்மையை எதிர்க்கும் வகையில் பெரும்பாலான பங்கேற்பாளர்கள் வெள்ளை நிற ரோஜாவை அணிந்திருந்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

2018ம் ஆண்டுக்கான முக்கிய கிராமி விருதுகளும், அவற்றை வென்றவர்களும்

சிறந்த இசை தொகுப்பு: புருனோ மார்ஸ் - 24K மேஜிக்

சிறந்த தயாரிப்பு: புருனோ மார்ஸ் - 24K மேஜிக்

சிறந்த பாடல்: புருனோ மார்ஸ் - 24K மேஜிக்

சிறந்த புதுமுக கலைஞர்: அலஸ்சியா கரா

படத்தின் காப்புரிமை Getty Images

சிறந்த பாப் இசை தொகுப்பு - எட் ஷீரன் - ÷ (டிவைட்)

சிறந்த ராக் இசை தொகுப்பு: தி விங்ஸ் ஆன் டிரக்ஸ் - எ டீப்பர் அண்டர்ஸ்டாண்டிங்

சிறந்த ஆர்&பி தொகுப்பு: புருனோ மார்ஸ் - 24K மேஜிக்

சிறந்த ராப் தொகுப்பு: கென்ரிக் லாமர் - டாம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்